இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி முன்னாள் ஆசிரியருக்கு இரண்டாண்டு கடுங்காவல்: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட அரசு பள்ளி முன்னாள் ஆசிரியருக்கு இரண்டாண்டு கடுங்காவல்: சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு


ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில், கிருஷ்ணகிரியில் உள்ள தோப்பூர் அரசு உயர்நிலை பள்ளி முன்னாள் ஆசிரியரான திரு பி ஆதிமணிக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்து சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி, சென்னை, தீர்ப்பளித்துள்ளார்.

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து 26 நபர்களிடம் இருந்து சுமார் ரூ 37 லட்சம் ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாக இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. விசாரணைக்கு பிறகு குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கான தண்டனை குறித்த விவரங்களையும் வெளியிட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா