தமிழ்நாட்டில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் இயக்க உத்தரவு.

தமிழ்நாட்டில் கூடுதலாக முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில் இயக்க உத்தரவு.


இரயில்வே நிர்வாகம் விரைவு வண்டிகளில் பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், சாதாரண பயணிகள் பயணிக்கும் வண்டிகளை இயக்க வேண்டும் என்றும் மதுரை மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை தெற்கு ரயில்வேக்கும் இரயில்வே அமைச்சருக்கும் வேண்டுகோள் விடுத்து இருந்த நிலையில் சில சாதாரண  பயணிகள் வண்டிகளும் பொது பெட்டிகளைக் கொண்ட சில விரைவு வண்டிகளும் இயக்க அனுமதித்து இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றன. 


இத்துடன் கூடுதலாக திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் இடையே அக்டோபர் மாதம்  7 மற்றும் 8 ஆம் தேதியிலிருந்து தினந்தோறும் 10 முன்பதிவில்லா பொது பெட்டிகளுடன் விரைவு ரயில் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  மதுரை இராமேசுவரம் இடையேயும்,


கோயமுத்தூர் மன்னார்குடி இடையேயும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் விரைவு வண்டி பொது பெட்டிகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.  புனலூருக்கும் திருவனந்தபுரத்திற்குமிடையே பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு வண்டி நாள் தோறும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 


மேலும்  சிறப்பு விரைவு வண்டிகளிலும் பொது பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும்  மற்றும் அணைத்து இரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரண பயணி வண்டிகளையும் இயக்கிட  கோரிக்கை மீண்டும் வலுப்பெறுகிறது.


  இராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி தென்னக இரயில்வே பொது மேலாளிடம் அளித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கோரிக்கையில்: மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு இரயில் நிலையங்களில் விரைவு வண்டிகள் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.  கொரானா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியதில் இருந்து சில விரைவு இரயில்கள் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

இராமேஸ்வரம் - வாரணாசி அதிவிரைவு வண்டி இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தத்திலும், பைசாபாத் - இராமேஸ்வரம் (06793) மற்றும் இராமேஸ்வரம் - பைசாபாத் (06794) இரயில்களை இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்த வேண்டும்.மேலும், சென்னை - இராமேஸ்வரமிடையே இயக்கப்படும் சேது எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் (08495), ராமேஸ்வரம் - புவனேஸ்வர் (08496) வரணாசி - இராமேஸ்வரம் (05119) மற்றும் ராமேஸ்வரம் - வாரணாசி (05120) விரைவு இரயில்களை மண்டபம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா