யூடியூப் சேனலில் டிடி சந்தனா (கர்நாடகா) சேனல் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்களைப் பெற்று முதலிடம்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தூர்தர்ஷன் சந்தனா சேனலுக்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்கள்: தென்மாநிலங்களில் டிஜிட்டல் பிரசார் பாரதி முன்னேற்றம்

 தென் மாநிலங்களிலிருந்து பிரசார் பாரதியின் டிஜிட்டல் தளங்கள் கடந்த சில


நாட்களாக வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளன. 

யூடியூப் சேனலில் டிடி சந்தனா (கர்நாடகா) சேனல் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நேயர்களைப் பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளது. டிடி சப்தகிரி ஆந்திரப்பிரதேசம், டிடி யதாகிரி (தெலங்கானா) ஆகிய சேனல்கள் ஐந்து லட்சம் நேயர்கள் என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்றன.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட யூடியூப் சந்தாதாரர்களுடன் தமிழ், மலையாளம் செய்திப் பிரிவுகள் மற்றும் தூர்தர்ஷன் கேந்திராக்கள் ஒன்றோடு ஒன்றும் மற்றும் இதர பிராந்திய மொழி ஊடக நிறுவனங்களுடனும் ஆரோக்கியமான போட்டியில் உள்ளன. தூர்தர்ஷன் தேசிய சேனல்களுக்கு இடையே சர்வதேச ஆங்கில செய்தி சேனல் டிடி இந்தியா, யூடியூப் தளத்தில் சமீபத்தில் ஒரு லட்சம் சந்தாதாரர்கள் என்ற இலக்கைக் கடந்துள்ளது.தனித்துவமான நிகழ்ச்சிகள், இளைஞர்கள் மற்றும் உலகளாவிய  நேயர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தியக் கதை ஆகியவற்றுக்கு நன்றி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா