தென்னக இரயில்வே முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளைக் கொண்ட 11 விரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது

தென்னக இரயில்வே முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளைக் கொண்ட 11 விரைவு இரயில்கள் இயக்கப்படுகிறது.

அதில் ஆறு ரயில்கள் மதுரைக் தோட்டத்திலிருந்து


 ஆறு ரயில் நிலையங்களிலிருந்து முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது
நவம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிக்குள் மதுரை கோட்டத்தில் பழனியிலிருந்து கோயமுத்தூருக்கும்  மதுரைக்கும் இரு ரயில்களும் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி , செங்கோட்டை, திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கு மூன்று ரயில்களும், விருதுநகரிலிருந்து தூத்துக்குடிக்கும் சேர்ந்த ஆறு முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளைக் கொண்ட விரைவு  ரயில் வண்டிகளை இயக்குவதற்கு தென்னக ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்து. 
நவம்பர்  8 ,10 ,11 ,15 ஆம் தேதியிலிருந்து வண்டிகள் தினமும் ஓடத் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவில்லா பொதுப் பெட்டிகளைக் கொண்ட வண்டிகளை இயக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதற்கு இரயில்வே நிர்வாகத்துக்கு பாராட்டு சொல்லலாம். .

விரைவு ரயில்களில் பொது பெட்டிகளை இணைக்க வேண்டுமென்றும், சாதாரண பயணிகள்  வண்டிகளையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் தற்போது நடவடிக்கை.20 மாதங்களுக்குப் பிறகு வரும் 10 நவம்பர் 2021 அன்று மீண்டும் இயக்கப்படுகிறது 


தொடர்வண்டி எண்: 06885/06886 ( பழைய தொடர்வண்டி எண் : 76837/38 ) காரைக்குடி - விருதுநகர் - காரைக்குடி DEMU Unreserved Special ( முன்பதிவில்லா சிறப்பு தொடர்வண்டி ) பழைய தொடர்வண்டியாக இருந்தபோது  திருச்சிராப்பள்ளி வரை சென்றது இன்னும் திருச்சிராப்பள்ளி வரை இயக்கப்படும் என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆதலால் இந்த தொடர்வண்டி காரைக்குடி வரை மட்டுமே செல்லும். பழைய படி திருச்சிராப்பள்ளி வரை இயக்கப்பட்டால் மட்டுமே அனைவரும் பயனடைவார்கள்.  மதுரை - கோயம்புத்தூர் இடையே பழநி வழியாக இருவழி மார்க்கத்தில் முன்பதிவில்லாத ரயில் போக்குவரத்து நவம்பர் 10 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.


 கோயமுத்தூர் - பழனி விரைவு ரயில் (06463) நவம்பர் 10 ஆம் தேதி பிற்பகல் 2:10 மணிக்கு கோயமுத்தூரிலிருந்து புறப்பட்டு மாலை 4:40 மணிக்கு பழனி சென்றடையும்.

மறுமார்க்கத்தில் பழனி - கோயமுத்தூர் சிறப்பு ரயில் (06462) பழனியிலிருந்து நவம்பர் 11 ஆம் தேதி காலை 11:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு கோவையை அடையும். அதே போன்று, நவம்பர் 10 ஆம் தேதி மாலை 4:45 மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் ரயில் (06479) இரவு 7:40 மணிக்கு மதுரை வந்தடையும்.எதிர்திசையில் மதுரை -பழனி ரயில் (06480) நவம்பர் 11 ஆம் தேதி காலை 7:20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் காலை 10:10 மணிக்கு பழனி சென்றடையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா