கொவிட்-19 அண்மைத் தகவல் தொகுப்பு

கொவிட்-19 அண்மைத் தகவல் தொகுப்பு

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 110.23 கோடி  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. .


கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25 சதவீதம்.

கடந்த 24 மணி நேரத்தில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,38,00,925 என அதிகரித்துள்ளது.


கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து தற்போது 0.40 சதவீதமாக உள்ளது. 2020 மார்ச் மாதத்திற்குப் பின், இது மிகக் குறைந்த அளவாகும்.

இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,38,556;  266 நாட்களுக்கு பின் இது குறைந்த அளவாகும்

தினசரி பாதிப்பு விகிதம் 1.10 ஆகும். கடந்த 38 நாட்களில் 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

வாராந்திர பாதிப்பு விகிதம் 1.18% கடந்த 48 நாட்களாக 2 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.


இதுவரை மொத்தம் 61.99 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 120 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 120 கோடிக்கும் மேற்பட்ட (1,20,08,58,170) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.


மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 16.74 கோடிக்கும் மேற்பட்ட (16,74,03,871) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 110 கோடியைக் கடந்தது

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,54,817 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 110 கோடி (1,10,23,34,225) கடந்தது. 1,12,38,854 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,878 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  3,38,00,925 ஆக அதிகரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25 சதவீதமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து 137  நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேருக்குப் புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை  1,38,556 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.40 சதவீதமாக உள்ளது; 2020 மார்ச் மாதத்திற்குப்பின் இது குறைந்த அளவு.

கடந்த 24 மணி நேரத்தில் 11,89,470 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 61.99  கோடி கொவிட் பரிசோதனைகள் (61,99,02,064) செய்யப்பட்டுள்ளன.

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 48 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 1.18 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 1.10 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 73 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 38 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதை வலுப்படுத்தும் பிரச்சாரம்: மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர திரு மன்சுக் மாண்டவியா ஆலோசனை

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது குறித்து  மாநில / யூனியன் பிரதேச  சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கொவிட் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்  குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள தகுதியான குடிமக்கள் யாரும்  பாதுகாப்பு கவசமான கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை நாம் அனைவரும் கூட்டாக இணைந்து உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள வயது வந்தோரில் 79 சதவீதம் பேர் முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பிரசாரத்தில் தகுதியான மக்கள் முதல் தவணை  தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2வது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.

பெரு நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள், கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். இங்கு மக்கள் அதிகளவில் வருவர். கொவிட் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக நாம் நினைக்க கூடாது. உலகம் முழுவதும் கொவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனாவில் 80 சதவீதத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியும்,  கொவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கின்றன.  கொவிட் தடுப்பூசி மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் கொவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. கொவிட்-19 தடுப்பூசி என்ற பாதுகாப்பு கவசத்துடன், கொவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு திரு. மன்சுக் மாண்டவியா பேசினார்.

கொவிட் மேலாண்மைக்கு தடுப்பூசிகள், மருந்துகள், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா