இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு

இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு தேர்வான படங்கள் அறிவிப்பு: 2 தமிழ் படங்கள் தேர்வு


கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்படுள்ளது.

தேர்வான 24 திரைப்படங்களில் பி எஸ் வினோத்ராஜ், இயக்கிய ‘கூழாங்கல்’ இடம்பெற்றுள்ளது. மேலும், கதையில்லா திரைப்படங்கள் பட்டியலில் 20 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கிய ‘ஸ்வீட் பிரியாணி’யும் அவற்றில் ஒன்றாகும்.


இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், கோவா மாநில அரசுடன் இணைந்து, 2021 நவம்பர் 20 முதல் 28 வரை இந்த விழாவை இந்திய திரைப்பட விழா இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ளது.விழாவில் கலந்து கொள்ள பதிவு செய்து கொண்டுள்ள அனைவருக்கும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள படங்களின் பிரதிநிதிகளுக்கும் கோவாவில் 9 நாட்கள் நடைபெறவுள்ள திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்படும்.


திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் திரு எஸ் வி ராஜேந்திர சிங் பாபுவும், கதையில்லா  திரைப்படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு பிரபல ஆவணப் பட இயக்குநர் திரு எஸ் நல்லமுத்துவும் தலைமையேற்றிருந்தனர்.


தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் திரைப்படமாக அசாம் மற்றும் நாகலாந்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பேசும் திமாசா மொழியில் உருவான ‘செம்கோர்’ படம் திரையிடப்படும். கதையில்லா பிரிவில் முதல் திரைப்படமாக ‘வேத்-தி விஷனரி’ எனும் ஆங்கில மொழி படம் திரையிடப்படும்.52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்கான ஊடகப் பதிவு ஆன்லைன் மூலம் தொடக்கம் 


கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள், தற்போது ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இந்த நடைமுறை, காணொலிக் காட்சி மூலம், இந்த திரைப்பட விழாவில் 2021 நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை பங்கேற்க விரும்புபவர்களுக்கு பொருந்தும். அவர்கள் கீழ்கண்ட இணைப்பின் மூலம்  பதிவு செய்யலாம். https://virtual.iffigoa.org


தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் நடைபெறுகிறது. ஏராளமான படங்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. பத்திரிக்கையாளர் சந்திப்புகள் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இதில் பத்திரிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் கேள்வி கேட்கும் வசதிகளும் உள்ளன. 


2021 ஜனவரி 1ம் தேதியன்று 21வயதுக்கு மேற்பட்ட  அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்கள், இந்த திரைப்பட விழாவில் பங்கேற்கலாம். ஊடகத்துக்கான பதிவு இலவசம்.  இந்த விழாவில் காணொலி மூலம் கலந்து கொள்ளவதற்கான உள்நுழைவுத் தகவல்கள் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த பதிவு மாற்றத்தக்கது அல்ல. மேலும் இந்த பதிவு, காணொலி மூலம் கலந்து கொள்வதற்கு மட்டுமே, திரைப்பட விழாவில் நேரடியாக கலந்து கொள்வதற்கு அல்ல.


52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் நேரடியாக கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யலாம்:https://my.iffigoa.org/extranet/media/
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா