மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் சி & டி நிலைத் தேர்வு 2020-ஐ, கணினி மூலம் நடத்த உள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கெழுத்தாளர் நிலை சி & டி தேர்வு 2020 (முதல் அடுக்கு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) சுருக்கெழுத்தாளர் சி & டி நிலைத் தேர்வு 2020-ஐ, கணினி மூலம்  நடத்த உள்ளது.

தென் மண்டலத்தில், 49,609 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்வுகள், தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலியிலும், ஆந்திராவில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஹைதராபாத், வாரங்கல் என மொத்தம் 13 இடங்களில்  23 மையங்களில் நடைபெறவுள்ளது.

தென் மண்டலத்தில் இந்த தேர்வுகள் நவம்பர் 11, 12 மற்றும் 15 ஆகிய மூன்று  நாட்களிலும் காலை 9 மணி முதல் நண்பகல் 11 மணி வரை ஒரு அணியாகவும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை இரண்டாவது அணியாகவும் நடைபெறும்.

தேர்வுக்கான மின்னணு அனுமதி சீட்டுகளை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து, தேர்வு தேதிக்கு நான்கு நாட்கள் முன்பிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுபற்றிய தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போனில் குறுந்தகவல் மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் (செல்போன், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை) தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது.  தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட / குற்றவியல்  ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மூன்று முதல் ஏழு ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

மின்னணு வடிவிலான தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை எடுத்துவராத விண்ணப்பதாரர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  தேர்வுக்கூட அனுமதி சீட்டில் பார் கோடு தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

மேல் விவரங்கள் / சந்தேகங்களுக்கு தேர்வாணையத்தின் தென்மண்டல அலுவலகத்தின் உதவி எண் (லேண்ட்லைன் – 044 2825 1139 & மொபைல் - 94451 95946) உதவி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

கொவிட்-19 தொற்றைக் கருத்தில் கொண்டு

ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தேர்வுகளை  சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்தும் வகையில் மின்னணு வடிவிலான நுழைவுச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைச் செயலரும், தென்மண்டல இயக்குநருமான திரு. கே. நாகராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா