ஹுனார் ஹாத்தின்” 32-வது பதிப்பை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்

ஹுனார் ஹாத்தின்” 32-வது பதிப்பை நவம்பர் 12 அன்று லக்னோவில் மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்


நாட்டின் பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைகளை பாதுகாப்பதற்கான சிறந்த தளமாக விளங்கி வரும் “ஹுனார் ஹாத்தின்” 32-வது பதிப்பை 2021 நவம்பர் 12 அன்று லக்னோவில் மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி

, 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துவார்கள் என்றார்.

கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள், கைவினைஞர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு “ஹுனார் ஹாத்” மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று திரு நக்வி கூறினார்.

அடுத்த "ஹுனார் ஹாத்" பதிப்புகள், புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் (நவம்பர் 14 முதல் 27 வரை), ஹைதராபாத் (நவம்பர் 26 முதல் டிசம்பர் 5 வரை), சூரத் (டிசம்பர் 10 முதல் 19 வரை), புது தில்லி ஜேஎல்என் ஸ்டேடியம் (22 டிசம்பர் 2021 முதல் 2 ஜனவரி 2022 வரை) ஏற்பாடு செய்யப்படும்..

மைசூரு, கவுகாத்தி, புனே, அகமதாபாத், போபால், பாட்னா, புதுச்சேரி, மும்பை, ஜம்மு, சென்னை, சண்டிகர், ஆக்ரா, பிரயாக்ராஜ், கோவா, ஜெய்ப்பூர், பெங்களூரு, கோட்டா, சிக்கிம், ஸ்ரீநகர், லே, ஷில்லாங், ராஞ்சி, அகர்தலா மற்றும் பிற இடங்களிலும் "ஹுனார் ஹாத்" வரும் நாட்களில் ஏற்பாடு செய்யப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா