சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் ரூ 57 லட்சம் மதிப்புடைய தங்கம் பறிமுதல்

ரூ 57 லட்சம் மதிப்புடைய தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல்


விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஃப்ளை துயாப் விமானம் மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த 3 பெண் பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் இடைமறித்தனர்.


அவர்களை சோதனை செய்து பார்த்த போது, தங்கப் பசை, வளையல் மற்றும் கட்டிகள் அவர்களிடம் இருந்தது கண்டறியப்பட்டு சுங்க சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 38.20 லட்சம் ஆகும்.

மற்றொரு வழக்கில், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கொழும்பில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் இடைமறித்தனர்.


அவரை சோதனை செய்து பார்த்த போது, தங்கப் பசை அவரிடம் இருந்தது கண்டறியப்பட்டு சுங்க சட்டம், 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. 429 கிராம் எடையிலான தங்க பசையின் மொத்த மதிப்பு ரூ 19.39 லட்சம் ஆகும்.

மேற்கண்ட தகவல்களை செய்திக் குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா