ஆடு திருட்டை தடுத்த போலீஸைக் கொன்ற சிறுவர்கள்!

படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனின் கொலை வழக்கில் தொடர்பு உடைய 2 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கொலைக்குத் துணையான 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நாவல்பட்டு காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளாக எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் பூமிநாதன் (வயது 56). நாகப்பட்டினம் மாவட்டம்  சந்தைவெளி கிராமம். இவருக்கு கீதா (வயது 48) மனைவியாவார். அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ படிக்கும் குகன் (வயது 24) எனும் மகனும் உண்டு.


சம்பவத்தன்று நாவல்பட்டு காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் பூமிநாதன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் ஆடுகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்றுள்ளனர். ஆடு ஏற்றிச் சென்றவர்கள் வேறு வழியில் தப்பிவிட்டனர். வேறு சிலரை பூமிநாதன் சுற்றிவளைத்தபோது


அப்போது மற்ற காவலர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்த போது ஆடு  திருடர்கள் அவரை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பியதையடுத்து சம்பவ இடத்திலேயே பூமிநாதன் உயிரிழந்ததாக அவ்விடத்திற்கு வந்த காவலர் சேகர் மற்றும் சித்திரவேல் ஆகியோர் இவர் படுகொலை

செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் திருச்சிராப்பள்ளி டி.ஐ.ஜி., சரவண சுந்தர், திருச்சிராப்பள்ளி எஸ்.பி., சுஜித்குமார், காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். சம்பவம் குறித்து, கீரனுார் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கொலையாளிகளை பிடிக்க, எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பூமிநாதன் உடல், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு, ஏ.டி.ஜி.பி., செந்தாமரைக் கண்ணன் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


நேற்று மாலை, திருச்சிராப்பள்ளி சோழமா நகரில் காவல்துறை 30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த கொலையாளிகள் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூர் என்ற பகுதியை சேர்ந்த அஜய், மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் 2 சிறுவர்களையும் பிடித்து விசாரிக்கின்றனர்.படுகொலை செய்யப்படும் முன் காவலர் சேகரிடம் செல்போனில் பேசிய சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதன் பிடிபட்ட நபர்கள் தேனீர்பட்டியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்திருந்ததாகக் கூறியதன்

அடிப்படையில் தனிப்படையினர் தேனீர்பட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். சிறப்பு சார்பு ஆய்வாளர் பூமிநாதனின் பின்தலையில், கறி வெட்டு அரிவாள் போன்ற ஆயுதத்ததால் வெட்டப்பட்டிருந்ததன் காரணமாக கறிக்கடை தொடர்புடைய ஆட்கள் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்த   நிலையில்.   அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை கொலை நடந்த இடத்தில் செயல்பட்ட செல்போன்களின் டவர் மூலம் காவல்துறையினர் விசாரணையைத் துவக்கி சம்பவ இடத்திலிருந்த 2 செல்போன்கள், புதுக்கோட்டை - பொன்னமராவதிக்கு இடையிலிருப்பதைக் கண்ட தனிப்படைக் காவல்துறையினர், நேற்று மதியம் அங்கு சென்ற போது கொலையாளி செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்ட நிலையில் விசாரணை இன்று அதிகாலை கொலையாளிகள் 4 பேரைப் பிடித்ததில்  2 பேர் சிறுவர்கள். கொலையாளிகள் கல்லணையை அடுத்த தோகூர் சேர்ந்தவர்கள் என்றும் ஆடுகளை திருடுவதை பல வருடமாகச் செய்து வருவது காவல்துறைக்குத் தெரியவந்தது எனவும். அறிந்த நிலையில் கொலையாளிகள் தற்போது திருச்சிராப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டனர்.

பிடிபட்டவர்களில் 5ஆம் வகுப்புப் படிக்கும் சிறுவன் ஒருவன் மற்றொருவன் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் என்பதாகும்‌‌ மற்றொருவன் மணிகண்டன் (வயது 19) என்பதும் அவன் மீது அதே  காவல் நிலையத்தில் மற்றொரு வழக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.பிடிபட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உண்டு. இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா