சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ராஜ்பவனில் பதவிப்பிரமாணம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனில்


பதவிப்பிரமாணம் செய்துவைத்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். நீதிபதி அவருக்கு நன்றி தெரிவித்தார்., அப்போது பேசிய நீதிபதி "அலகாபாத் உயர்நீதிமன்றத்தைத் தொடர்ந்து பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆன்மீகத்திற்கும்,

கோவில்களுக்கும் பெயர் பெற்றது தமிழ்நாடு. கலாச்சார ரீதியாகவும் வரலாறு ரீதியாகவும் தமிழ்நாடு மேன்மையானது. தமிழ்நாடு மீது தீராத காதல் எனக்கு, தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என முன்பு கனவு கண்டேன் அந்தக் கனவு தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளது. வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இரதத்தின் இரு சக்கரங்கள், நீதி பரிபாலனத்திற்கு இரண்டு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என் பணியில் பயமோ பாரபட்சமோ இருக்காது என உறுதிபடத் தெரிவிக்கிறேன். பேச்சை விட செயலில் காட்ட விரும்புகிறேன்,

அனைவரின் ஒத்துழைப்பும் எனக்குத் தேவை" என நன்றி தெரிவித்துப் பேசினார்

அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ் அமல்ராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பு தலைமை நீதிபதியை வரவேற்றுப் பேசினர்.

தமிழ் கற்க தொடங்கியதாக தெரிவித்த நீதிபதி தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நேற்று முதல் தமிழ் கற்க தொடங்கிவிட்டேன், தற்போதைக்கு "வணக்கம்" "நன்றி" என்ற இரண்டு வார்த்தையை தெரிந்து கொண்டுள்ளேன். என்று பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா