பத்ம விருதுகளை வழங்கினார் இந்திய குடியரசுத் தலைவர்

 பத்ம விருதுகளை வழங்கினார் இந்திய குடியரசுத் தலைவர்

2020ம் ஆண்டுக்கான 4 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 61 பத்ம ஸ்ரீ விருதுகளை,




குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் இன்று (நவம்பர் 8ம் தேதி) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு
பத்ம விருதுகளை வென்றவர்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.


பத்ம விருதுகளை பொதுமக்களின் விருதுகளாக மாற்றுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயங்கி வரும் மத்திய அரசின் உண்மையான பிரத்தியேக முயற்சி இது என்று அவர் கூறினார்.
இதுகுறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "எமர்ஜென்சியை எதிர்ப்பதில் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியது

வரை காலம் சென்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களின் வாழ்க்கை நாட்டிற்கு ஆற்றும் தன்னலமற்ற சேவையின் சிறப்பான அடையாளமாகும். திரு மோடி அரசால் அவருக்கு பத்ம விபூஷண் வழங்கப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான ஒன்றாகும்," என்று கூறியுள்ளார்.

"சட்டம், நிதி மற்றும் இதர துறைகளில் தமது ஞானம் மற்றும் அனுபவத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு நினைவு கூறத்தக்க பங்கை காலம் சென்ற அருண் ஜேட்லி அவர்கள் ஆற்றினார். அவருக்கு பத்மவிபூஷன் கௌரவம் வழங்கியிருப்பது திரு மோடி அரசின் மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்," என்று திரு அமித் ஷா கூறினார்.
"காலம் சென்ற சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் வாழ்க்கை, பொதுமக்கள் நலன் மற்றும் நாட்டிற்கான சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டு இருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சராக வெளியுறவு அமைச்சகத்தை பொதுமக்களுடன் இணைத்ததற்காக அவர் நினைவு கூறப்படுவார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கிற்காக திரு மோடி அரசால் பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கு செலுத்தப்படும் மிகவும் பொருத்தமான அஞ்சலியாகும்," என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

"குஜராத்திற்கு இன்று மிகவும் மகிழ்ச்சியான நாள் ஆகும். திரு கஃபூர் பாய் எம் பில்கியா, திருமதி சரிதா ஜோஷி, பேராசிரியர் சுதிர் குமார் ஜெயின், திரு சகாபுதீன் ராத்தோட், டாக்டர் ஹெச் எம் தேசாய், திரு யாஜ்தி நவ்ஷிர்வான் கரஞ்சியா, திரு நாராயண் ஜே ஜோஷி 'கரியால்' மற்றும் டாக்டர் குர்திப் சிங் ஆகியோருக்கு அவர்களது சிறப்பான பங்களிப்புக்காக மோடி அரசால் பத்மஸ்ரீ விருது  வழங்கப்பட்டுள்ளது," என்று மத்திய உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா