கோனேரு ராமகிருஷ்ணா ராவ் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்

கோனேரு ராமகிருஷ்ணா ராவ் மறைவுக்கு குடியரசு துணைத்தலைவர் இரங்கல்


பிரபல கல்வியாளரும், ஆசிரியரும், தத்துவஞானியுமான திரு கோனேரு ராமகிருஷ்ணா ராவ் மறைவு குறித்து, குடியரசு துணைத்தலைவர் திரு.எம் வெங்கய்யா நாயுடு மிகுந்த  வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தனிப்பட்ட முறையில் பல தசாப்தங்களாக தமக்கு மிகவும் அறிமுகமான பேராசிரியர் ராவின் மறைவு, தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

பன்முகத் தன்மை கொண்ட பேராசிரியர் ராவ், ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர், ஆந்திர மாநில உயர்கல்வி ஆணையத் தலைவர், ஆந்திரப்பிரதேச மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் உள்ளி்ட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்று அவர் கூறியுள்ளார். 


கல்வித்துறையில் அவரது மதிப்பிடற்கரிய பங்களிப்பும், அவரது காந்திய சிந்தனைகளும், பலருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திர பல்கலைக்கழகத்தில், பாராசைக்கலாஜிக்கு தனித்துறையை உருவாக்கிய பெருமைக்குரிய ராவ், பல்வேறு நூல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதையும் திரு நாயுடு சுட்டிக்காட்டியுள்ளார்.

காலஞ்சென்ற ராவின் குடும்பத்திற்கு தமது ஆழந்த இரங்கலையும் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா