பட்டமங்கலம் கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் வருவாய் ஆய்வாளர் தகவல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் திருக்கோஷ்டியூர் வருவாய் ஆய்வாளர் தகவல்.


மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) அவர்களின் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  மேலப்பட்டமங்கலம் குருப் மற்றும் கிராமத்திலுள்ள சமுதாயக் கூடத்தில்  வியாழக்கிழமை 25.11.2021-ஆம் தேதி  காலை 10.00 மணியளவில் நடைபெறும் முகாமிற்கு திருக்கோஷ்டியூர்                            உள்வட்டத்திற்குட்பட்ட அனைத்து உட்கடை கிராம மக்களும் பயன் பெறும் வகையில்,


பட்டா மாறுதல்,  இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேசன் கார்டு, நிலம் தொடர்பான பிரச்சனைகள், ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் தொடர்பான மனுக்கள், அனைத்து பிரச்சனைகளுக்கும் மேற்கண்ட முகாமில் மனுக்கள் கொடுப்பதன் மூலம் தீர்வு காணப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதாக திருக்கோஷ்டியூர் பிர்க்கா வருவாய் ஆய்வாளர் தெரிவித்தார்.      பொதுமக்களின் குறைகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காக , மக்கள் தொடர்பு முகாம் திட்டம் 1969-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன் கிழமையன்று நடத்தப்படுகிறது. அந்தந்த

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மொத்த மாவட்ட நிருவாகமும் ஒரு குழுவாகச் சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு,இதர அரசு சேவைகளும் வழங்கப்படுவதே இத்திட்டத்தின் சிறப்பு.

இம்முகாம்களைப் பயனுள்ளதாகச் செயல்படுத்த: தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),வருவாய் கோட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஆகியோர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை, மாதத்தின் நான்கவது புதன்கிழமை செலுத்தப்படுகிறது.

பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீதான இறுதி ஆணைகள் மக்கள் தொடர்பு முகாம் நாளன்று பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அம்முகாம்களிலேயே முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா