ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021

ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021


இன்று மாண்புமிகு பிரதம மந்திரி திரு நரேந்திர மோடி அவர்களால்,ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பாளர் திட்டம், 2021(திட்டம்), இணையம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.

2.இந்தத் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரிசர்வ் வங்கியின் மூன்று குறை தீர்ப்பாளர் திட்டங்களான

(i) வங்கி குறை தீர்ப்பாளர் திட்டம், 2006, (ii) வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான குறை தீர்ப்பாளர் திட்டம், 2018 மற்றும் (iii) டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான குறைதீர்ப்பாளர் திட்டம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைக்கிறது. ரிசர்வ் வங்கியால், வங்கியியல் ஒழுங்கு முறை சட்டம், 1949 பிரிவு 35A, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 45L மற்றும் கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007 (51) பிரிவு 18 ஆகியவற்றின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்ட இந்தத் திட்டமானது,  ரிசர்வ் வங்கியால் ஒழுங்குப்படுத்தப்படும் நிறுவனங்களின் சேவைகளில் உள்ள குறைகளின் மீதான வாடிக்கையாளர் புகார்கள் வாடிக்கையாளர்களின் திருப்திக்கு ஏற்றவாறு தீர்க்கப்படாவிட்டாலோ அல்லது ஒழுங்குப்படுத்தப்படும் நிறுவனம் 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டாலோ, செலவு இல்லாமல் தீர்வை வழங்கும்.

3. இந்தத் திட்டம், ஏற்கனவே நடைமுறையில் உள்ள மூன்று திட்டங்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல், ரூ. 50 கோடி அல்லது அதற்கு மேல் வைப்பு அளவைக் கொண்ட திட்டமிடப்படாத முதன்மைக் கூட்டுறவு வங்கிகளையும் இதன் வரம்பிற்குள் கொண்டு வருகிறது. ஆர்பிஐ குறை தீர்ப்பாளர் பொறிமுறையை அதிகார வரம்பு நடுநிலைத் தன்மையுள்ளதாக மாற்றியமைத்துள்ளதன் மூலம்' ஒருநாடு ஒரு குறைதீர்ப்பாளர்' என்ற அணுகு முறையை இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்துகிறது.

4. இந்தத் திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்:

இனி புகார்தாரர் எந்தத்திட்டத்தின் கீழ் அவரது/ அவளதுபுகாரைக் குறைதீர்ப்பாளரிடம் பதிவுசெய்யவேண்டும் என அறிய வேண்டிய அவசியமில்லை.

இந்தத்திட்டம், குறிப்பிட்ட விலக்குகள் பட்டியலுடன்' சேவையில் குறைபாடு' என்பதை புகாருக்கான காரணமாக வரையறுக்கிறது. எனவே, இனி புகார்கள் "காரணம் திட்டத்தின் கீழ் வரையறுக்கப்படவில்லை" என்பதற்காக நிராகரிக்கப்படாது.

இந்தத்திட்டம் ஒவ்வொரு குறைதீர்ப்பாளர் அலுவலகத்தின் அதிகார வரம்பையும் நீக்கியுள்ளது.

ஒருமையப்படுத்தப்பட்ட பெற்றுக் கொள்ளுதல் மற்றும் செயலாக்கமையம், ஆர்பிஐ சண்டிகர்-இல், நேரடியாக அல்லது இ-மெயில் மூலம் பெறப்படும் எந்த மொழி புகார்களையும் பெற்று ஆரம்பநிலை செயலாக்கத்தை தொடங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்பு மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராகவாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு தகவல்களை அளிக்கும் பொறுப்பு, பொதுத்துறைவங்கியின் பொதுமேலாளர் அல்லது அதற்குநிகரானபதவியில் உள்ள முதன்மை நோடல் அதிகாரியை சார்ந்திருக்கும்.

ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் திருப்திகரமான மற்றும் சரியான நேரத்தில் தகவல்களை அல்லது ஆவணங்களை வழங்காததற்காக குறை தீர்ப்பாளரால் விருது வழங்கப்பட்டிருந்தால் அத்தகையவழக்குகளில் நிறுவனத்திற்கு மேல்முறையீட்டு உரிமை கிடையாது.ஆர்பிஐ–இன் நுகர்வோர் கல்வி மற்றும் பாதுகாப்புத்துறைக்கு பொறுப்பான நிர்வாக இயக்குனர் இத்திட்டத்தின் கீழ் மேல் முறையீட்டு அதிகாரியாக இருப்பார்.

6. புகார்கள் தொடர்ந்துhttps://cms.rbi.org.in. என்ற இணைய இணைப்பு மூலம் பதிவு செய்யப்படலாம்.  மேலும், புகார்கள் குறிப்பிட்ட வடிவத்தில் அதற்கென பிரத்யேக இ-மெயில் முகவரி வாயிலாகவோ இந்தியரிசர்வ்வங்கி, 4-வதுதளம், செக்டர்17, சண்டிகர்  - 166017 முகவரியில் அமைக்கப்பட்டுள்ளமையப்படுத்தப்பட்ட ரசீது/பெற்றுக்கொள்ளுதல்மற்றும் செயலாக்க மையத்திற்கு நேரடியாக அனுப்பப்படலாம்.கூடுதலாக, கட்டணமில்லா எண் - 14448 (9:30 am  முதல்5:15pm  வரை) கூடிய ஒரு தொடர்புமையம் தொடக்க நிலையாக இந்தி, ஆங்கிலம் மற்றும் எட்டு பிராந்திய மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் அதுவிரைவில் மற்ற இந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தொடர்புமையம் ஆர்பிஐ- இன்மாற்று குறை தீர்க்கும் பொறி முறையைப் பற்றிய தகவல்கள்/விளக்கங்களை வழங்கும் மற்றும் புகாரைப் பதிவு செய்வதற்கு புகார்தாரர்களுக்குவழிகாட்டும்.

7. இந்ததிட்டத்தின் நகல், ஆர்பிஐ இணைய தளத்திலும் சிஎம்எஸ் போர்ட்டலிலும் கிடைக்கும். இந்ததிட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.ஆர்பிஐ சில்லறை நேரடி திட்டம்


இந்திய ரிசர்வ் வங்கி, சேமிப்பு மற்றும் முதலீட்டு வசதிகளை அணுகுவதை சௌகரியப்படுத்துவதன் மூலம் நிதியியல் உள்ளடக்கத்திற்கான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சாமானிய மனிதனுக்கு சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு பல விருப்பத் தேர்வுகள் இருக்கின்றன, அவற்றுள் ஒன்று அரசாங்கப் பத்திரங்கள் ஆகும். முதலீட்டாளருக்கு அசல் மற்றும் வட்டியைப் பெறுவதற்கான உத்தரவாதம் இருப்பதால், அரசாங்கப் பாத்திரங்களில் முதலீடு செய்வது என்பது பாதுப்பானது மற்றும் பத்திரமானது ஆகும்.

2. இருப்பினும், தனிநபர் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பை அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதில் மந்தமான ஆர்வத்தையே காட்டியுள்ளனர். நிதியியல் சேர்க்கைக்கான இலக்கை விரிவுப்படுத்தவும், இந்த முதலீட்டாளர்கள் அரசாங்கப் பத்திரங்கள் சந்தையை சுமூகமாகமான மற்றும் நேரடி அணுகலை அளிக்கவும்,‘ஆர்பிஐ சில்லறை நேரடி’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ-யுடன் பத்திரங்களுக்கான கணக்கை கட்டணமில்லாமல் தொடங்கவும் அரசாங்கப் பத்திரங்கள், கருவூல பில்கள் மற்றும் சாவரின் தங்கப் பத்திரங்கள் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் முதலீடு செய்வதையும் இந்திய ரிசர்வ் வங்கி எளிமையாக்கியுள்ளது.

3. முதலீட்டாளர்கள் ‘ஆன்லைன் போர்ட்டல்’ ஐ உபயோகப்படுத்துவதால் பின்வரும் வசதிகளை பெறுகின்றனர்:

ஆர்பிஐ நடத்தும் முதன்மை ஏலத்தில் அரசாங்கப் பாத்திரங்களை வாங்குதல்.

இரண்டாம் நிலை சந்தையில் அரசாங்கப் பத்திரங்களை வாங்கல் மற்றும் விற்றல்.

இணைய தள வங்கி சேவை வாயிலாக சேமிப்புக் கணக்குகளில் இருந்து மற்றும் யூபிஐ மூலம்  பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்  செலுத்துதல்.

முதலீட்டாளர்கள் தங்களது சில்லறை நேரடி கணக்கில் இருக்கும் அரசாங்கப் பத்திரங்களை அடமானம் வைத்து நிதியியல் நிறுவனங்களில் கடன் பெறலாம்.

முதலீட்டாளர்கள் அந்த கணக்கை பயன்படுத்தி மற்ற முதலீட்டாளர்களுக்கு அரசாங்கப் பத்திரங்களைப் பரிசளிக்கலாம்.

முதலீட்டாளர்களுக்கு குறைதீர்க்கும் வசதியை அணுகுவதற்கான வழி உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்