பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானம் மே, 22 ஆம் தேதி தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிவடையும்

பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானம் மே, 22 –ல் தொடங்குகிறது; 2 ஆண்டுகளில் முடிவடையும் – திரு சர்பானந்தா சோனாவால்


குவஹாத்தியில் அமைக்கப்படும் பண்டு கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனக் கட்டுமானப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம், சென்னை ஐஐடி, உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் ஆணையம் ஆகியவற்றின் உயர்நிலை அதிகாரிகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் திங்கள் அன்று சந்தித்தார்.


  இதன் மேல்கட்டுமானப் பணிகள்  2022 மே மாதத்தில் இருந்து தொடங்கவிருப்பதால் தொழில்நுட்பப் பணிகளை நிறைவு செய்யுமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  கட்டுமானப் பணிகளை 2024-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  இந்த நிறுவனம் அமைக்கப்படும் போது இந்த பிராந்தியத்தின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கும்.  இந்த திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் அமலாக்கத்தை, உள்நாட்டு நீர்வழிப் பாதைகள் ஆணையம், கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் ஆகியவை  கூட்டாக செயல்படுத்துகின்றன.  தொழில்நுட்ப உதவி, சென்னை ஐஐடி-யால் வழங்கப்படுகிறது.  அசாம் அரசால்  வழங்கப்பட்டுள்ள 3.67 ஏக்கர் நிலத்தில் இந்த நிறுவனம் அமைக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்