உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்

என்னமா? இப்படிப் பண்றீங்களேம்மா!    உனக்கு அநீதி இழைக்கப்படும் போது கடவுளிடம் முறையிடாதே, நீயே கடவுளாக மாறு. இதுவே .அன்னபூரணி (அரசு) க்கு சொல்லிக் கொடுத்தவர்களின் தாரக மந்திரம்


அம்மாவென்றும் பூரணி என்றும் கூறும் ஆன்ட்டிகளையெல்லாம் சாமியாரென ஏற்றுக் கொள்ள மக்கள் மனதில் உள்ள அவ்வளவு பாதிப்புகள். அது தீராதா எனும் ஆதங்கம் தான்.

நியாயம்னு ஒன்னு இருக்கு  ஆண் சாமியார் பங்காரு அடிகளாரை அம்மானு சொல்கிற மக்கள் வாழ்கிற சமூகத்தில் இந்த அடுத்த ஆண்கள் தொடர்பான ஆன்ட்டியை!  அதாவது பூரணியைக் கொண்டாடுவதில் என்ன தவறு.? எனக் கேட்பவர்கள் உண்டு.  நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டிய  மக்கள் தானே ?      அண்ணபூரனி ஆன்ட்டி சாமியார் ஆனதும் இப்படித்தான்..?. நித்தியை விட இந்தச் சித்தியானவர் அவசர கதியில் புகழ்?ஆயிட்டாங்க போல! இது மருவத்தூருக்கு ஆண் அம்மாவுக்கு வந்த சோதனையா என்ற வினா எழுகிறது. எங்கிருந்தோ ஒரு தேவ கானம் இப்போது கேட்கிறது வேதனை வேதனை.! உடனே எங்கிருந்து வந்தது இந்த சுருட்டிகளும்,செஞ்சுருட்டிளும்..


அம்மாவின் திவ்ய தரிசனம் தரிசன நாள்: 01-01-22 - சனிக்கிழமை  தரிசன நேரம் : காலை 9.00 மணி முதல்  தரிசன இடம் : வாசுகி மஹால் , 228, நேரு நகர், வல்லம், செங்கல்பட்டு

PH :....../........!

(தரிசனத்திற்கு அனுமதி இலவசம்).   இப்படி விளம்பரங்கள் செய்ய இவர் யார் மூல கர்த்தா யார்? .               


                         இயற்கை மனிதனைப் படைத்தது. 

மனிதன் தனக்கு தோன்றியதையெல்லம் படைத்தான், பணத்தையும் மதங்களையும் சேர்த்து. 

மதங்கள் கடவுளைப் படைத்தன.

மனிதனை மரணம் என இயற்கை திரும்ப அழைக்கிறது..மனிதன் படைத்த எதுவுமே அவனைக் காப்பாற்றி இந்த பூமியில் நிரந்தரமாக தங்க வைக்க முடியவில்லை.

இந்த உலகின் மனித குலத்தில் மிக நீண்ட நெடிய போரும், மிகச்சிறிய அக்கப்போரும் ஒரு  ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேதான் நடைபெறுகின்றன. இதுமட்டுமே உண்மை சிலர் ஆன்மீகம் பேசி திரைப் பாடல் வரிகளில்         

                                        "சத்தியம் தவறாத

உத்தமர் போலவே நடிக்கிறார்.

சமயம் பார்த்து பல வகையிலும்

கொள்ளை அடிக்கிறார்.

பக்தனை போலவே

பகல் வேஷம் காட்டி

பாமர மக்களை

வலையினில் மாட்டி

இன்னும் எத்தனை காலம்தான்

ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே...."
எனப் பாடும் வரிகளில் அர்த்தம் தெரிகிறது. ஏற்கனவே திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான அரசு என்ற நபருக்கும் அன்னபூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு லிவிங் டூ கெதராக  வாழ்ந்து வந்துள்ளனர். இது தெரிந்த அரசின் மனைவியும் அவரது குடும்பம் அன்னபூரணியை அடித்துத் தாக்கி விரட்டிய நிலையில்.


எதிர்ப்புத் தெரிவித்த அரசு, வாழ்ந்தால் அன்னபூரணியுடன் தான் வாழ்வேன் என்றும், முதல் மனைவியை விவாகரத்து செய்துகொள்கிறேன் என்று கூறவே, இந்த விவகாரம் வெளிவந்த பிறகு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய லட்சுமி ராமகிருஷ்ணன் பங்களிப்பு  நடத்திய  'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு வரவைத்து நேரடி ஒளிபரப்பு. அந்த எப்பிசோடும் வைரலானது. பின்னர் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அன்னபூரணி ஆன்மிகத்திலிறங்கி அவரது பக்தர்களின் மனதில் ஆதிபராசக்தியாக மாற்றமாகி குடியேறிவிட்டார். நான் கடவுளின் அவதாரம் எனச் சொல்லிக் கொண்டு வருபவர்களை மக்கள் நம்பக் கூடாது. சிந்தித்து கண் விழித்துக் கொள்ள வேண்டும். அதுதான் முக்கியமானது. நிகழ்ச்சிக்கு வந்த போது அந்தப் பெண்ணுக்கு சட்டவிரோதமாக இன்னொருவரின் கணவருடன் குடும்பம் நடத்துவது தவறு என அறிவுரை வழங்கினேன். ஆனாலும் அவருடன் தான் வாழ்வேன் என அன்னபூரணி கூறினார். பெற்றோரைத் தவிர வேறு யார் காலிலும் விழாதீர்கள் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்         மக்களிடையே கலி முற்றியதால் அதை விரட்ட ஒரு ஒளியாக வந்துள்ளேன் எனக்கூறி  தான் செய்த விளம்பரங்களில் தமிழகத்தில் ஆதி_ பராசக்தி_  அம்மா உருவெடுத்துள்ளார். கடந்த 2020  ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான அன்னபூரணி 2021 ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அம்மா அன்னபூரணியாக அவதாரம்?  எடுத்துள்ளார். அவர்கள் கணவனை விட்டுப்  பிரிந்து தற்போது வேறு ஒரு பெண்ணின் கணவருடன் வாழ்ந்து வருகிறார். ஆதி பராசக்தி அம்மாவாக உருவெடுத்துள்ள காணொளிக் காட்சி சமீபத்திய சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக


இந்த நிலையில்தான் அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு நேற்று  தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் உள்ள  வாசுகி மஹால் மண்டபத்தில் நடைபெற இருந்த அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளருக்கு காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்த நிலையில். இது தொடர்பாக செய்தியாளர்கள் இந்த அருள்வாக்கு தொடர்பாக அன்னபூரணி தரப்பில் விசாரிக்கப் போன் செய்தால் அவர் மற்றும் அவரின் சீடர்கள் நிர்வாகிகள் போன் அனைத்தும் அனைத்து வைக்கப்பட்டது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காவல்துறையினர் தரப்பில் விசாரித்ததில், அவரைத் தேடி வருகிறோம். விரைவில் அவரிடம் விசாரணை நடத்துவோம். தேவைப்பட்டால் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். அதில், இங்கே நிறைய பேர் புரளிகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் இங்கு தான் இருப்பேன். ஆன்மிகம் என்பது சொன்னால் புரியக் கூடிய விஷயம் இல்லை. 2009 ஆம் ஆண்டு எனது கணவர்? அரசுவுடன் திருமணம் நடைபெற்றது. 2013 ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்தேன்.நான் சொல்ல வருவதை சாதாரண மக்களுக்கு புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்றார். அப்போது ஆன்மீக வாழ்விற்கு முந்தைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நெறியாளர் அந்த நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். அதற்கு கொந்தளித்த அன்னபூரணி, கோபமடைந்து என்னை சாதாரணமாக நினைத்துவிட்டீர்கள். இல்லை என்னை பற்றி உங்களுக்குப் புரியவில்லை என கோபமாக கத்தியதில் அவருக்கு மூச்சு வாங்கியது.பின்னர் தண்ணீரைக் குடித்த அன்னபூரணி (அரசு) பேட்டியைத் தொடர்ந்தார். அவர் மேலும் கூறுகையில் நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. இந்த முகவரியைக் கொடுத்து காவல்துறையினருக்குப் போன் செய்யுங்கள் என்றார்.ஜனவரி 1 ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு தனியார் மண்டபத்தில் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனுமதியின்றி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அன்னபூரணி அரசு  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த பின்னர் பிஹைண்ட்வுட்ஸ் காணொளிகாட்சி நிறுவனத்திற்காக அன்னபூரணி (அரசு)  பேட்டி அளித்திருந்தார். இந்த போலி வேடதாரிகள் உருவாக யார் மூல கர்த்தா வினா விடை காணும் முன்.கண்ணீரும்,கம்பளையுமாக தான் அலைந்து நியாயம் கேட்டு வந்த பெண்மணி காலில் விழும் மக்களின் முன் நாம் கூறும் பதில் பராசக்தி திரைப்படம்  கூறும் வசனம் தான்...

. எப்போது பேசினார் பராசக்தி...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்