பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021

பிளாஸ்டிக் உற்பத்தி ஆலைகளை மூடுதல் 


குறைந்த அளவு பயன்பாடு கொண்ட மற்றும் அதிகளவு குப்பைகளை குவிக்கக்கூடிய ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்குள் தடைவிதிப்பது குறித்த பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ஐ மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்  துறை 12 ஆகஸ்ட் 2021 அன்று வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பொறுத்தவரை  அவற்றின் உற்பத்தி, ஏற்றுமதி, சேமித்து வைத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்க பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகள் 2021-ல் வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 75 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகளுக்கு 30 செப்டம்பர் 2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.  120 மைக்ரானுக்கும் குறைவான  பிளாஸ்டிக் கேரிபேக்குகளுக்கு 31 டிசம்பர் 2022 முதல் தடைவிதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளதாக

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்