நதி உத்ஸவத்தின் 3ம் நாளில் நாடு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள்..

நதி உத்ஸவத்தின் 3ம் நாளில் நாடு முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள்..நதி உத்ஸவத்தின் 3ம் நாளான இன்று, 16-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் 41 மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மத்திய மற்றும் மாநில அளவிலான அமைப்புகள், துறைகள், மாவட்ட நிர்வாகங்களின் உதவியுடன், இந்த கொண்டாட்டங்கள் நடக்கின்றன. இதில் பள்ளி மாணவர்கள், நேரு யுவ கேந்திர அமைப்பினர், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

மரக் கன்றுகள் நடுதல், சுத்தப்படுத்தும் பணிகள், கங்கா ஆரத்திகள், வரைபட போட்டிகள், வாசகங்கள் எழுதுதல், நதி பூஜைகள், படகு போட்டிகள், கதை சொல்லும் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் நதி மகோத்ஸவத்தில் நடத்தப்பட்டனஆண்டுக்கு ஒரு முறை நதி விழாக்களை கொண்டாட வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.இதையடுத்து கங்கையை சுத்தப்படுத்துவதற்கான தேசிய இயக்கம் கங்கா உத்சவ் என்ற நதி விழா அனைத்து நதிகளிலும் நடத்தப்பட்டது...நதி உத்சவம் 2021, டிசம்பர் 16ம் தேதி தொடங்கியது. இது நாடு முழுவதும் டிசம்பர் 23ம் தேதி வரை கொண்டாடப்படும். இது ஜல்சக்தி அமைச்சகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.


விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தின் கீழ், இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. நதி உத்சவம் 2021 நிகழ்ச்சிக்கு, 10 முக்கிய நிதிகள் உட்பட இதர நதிகளை கொண்டாட 22-க்கும் மேற்பட்ட மாநிலங்களில்.. 170க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்