வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் இரண்டு நாட்களில் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டது

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை டிசம்பர் 16, 17 என இரண்டு நாட்களில் நடைபெற்ற நிலையில் வங்கிச் சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது


குறிப்பாக ஏடிஎம் சேவைகள் இந்த வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டது1955 ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட்  வங்கி அரசின் பொதுத் துறை வங்கியானது. அப்போது அதிகமான தனியார் வங்கிகள் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால் 1969 ஆம் ஆண்டில் 14 தனியார் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன. அதாவது 1947 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை 559 தனியார் வங்கிகள் திவாலானதில் மக்கள் பணத்தை பறிகொடுத்தனர்.

 1969 ஆம் ஆண்டில் தனியார் வங்கிகள் வழங்கிய கடன்கள் 3,987 கோடிகள் மட்டுமே ! , இந்த ஆண்டு வரை மக்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் ஒரு கோடியே ஏழு லட்சத்து 10,000 கோடிகள் 


 இந்தியாவில் 52,000 கிராமங்களில் வங்கிக் கிளைகள் உள்ளன. அவற்றை ஒரு லட்சமாக்க அதிகரிக்க வேண்டுமே தவிர இருப்பதையும் மூடிவிடக் கூடாது என்பதும். முன்பிருந்த 28  தேசிய வங்கிகளை 12 எனக் குறைத்துள்ள நிலையில், இந்த வங்கிகளையும் ஒன்றோடொன்று இணைந்து தற்போது எட்டு வங்கிகளானது . , தற்போது அந்த வங்கிகளை தனியாருக்கே  கொடுக்கிறது. தனியார்கள் புதிய வங்கிகளை எவ்வளவு வேண்டுமானாலும் உருவாக்கட்டும். ஆனால் செயல்படும் பொதுத் துறை வங்கிகளை அவர்களிடம்  கொடுப்பது மக்களைப் பாதிக்கும் பாதகமாகும். இது நடந்த பின்னர் மக்கள் படும் துயரங்கள் அதிகமாகும். வங்கியின் தற்போதுள்ள ஊழியர்கள் மட்டுமே எதிர்த்து இப்போது போராடி வருவது இது மக்களை பெரிதும் பாதிக்கும் பிரச்சினை என்பதால் தான். ஆகவே, இதை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் கட்டமைக்கப்பட வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவுடன்  விவசாயிகள் பிரச்சினைகள் முடிந்த நிலையில். அடுத்ததாக தொழிலாளர்களின் பிரச்சினை  தற்போது துவங்கியுள்ளது. பொதுத் துறை வங்கிகளில் பாதுகாப்பாக உள்ள அனைத்துப் பணத்தையும் அப்படியே தனியாரிடம் கொடுக்க சட்டத் திருத்தம் கொண்டு வருகிற நிலையில். இதை முன்னிட்டு வங்கி ஊழியர்கள் தற்போது போராடுகிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்