யூடியூபர் கிஷோர் கே.சுவாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

பாரதிய ஜனதா ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக


முன்னால் முதல்வர் காலமான ஜெ.ஜெயலலிதா மரணத் தருவாயில் மாறிய சமூக வலைதளங்களில் செய்தி பரப்புரை செய்த கிஷோர் கே சுவாமி சிறை சென்ற பிறகு அவர் மீது பலரும் புகார் கொடுத்ததனால்  ஏழு வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தெரிவித்த நிலையில். கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த சினிமா நடிகை ரோகிணியும் கிஷோர் மீது புகார் கொடுத்திருந்தார். இதேபோல் பல தரப்பினரும் புகார் தெரிவித்த காரணமாக யூ டியூபர் கிஷோர் கே சுவாமி மீதான குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில். அதை  இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூ டியூபரான கிஷோர் கே சுவாமி காலஞ்சென்ற முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் மு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர்மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் நிலையில்.

 சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் செய்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிஷோர் கே சுவாமியை ஜூன் மாதம் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து அவரை புழல் மத்திய சிறையில் வைக்கப்பட்டார் அதன் பின்னர் அவர் மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜரானார். தற்போது அவர் மீதான குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


கிஷோர் கே.சுவாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல்துறை ஆணையர்  ஜூன் 25 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை கிருஷ்ணசுவாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். கிஷோர் கே சுவாமி தனது மீதான 7 வழக்குகளில் ஏற்கனவே ஜாமினும் பெற்றுள்ளார். எனவே, அவர் இன்னும் ஓரிரு நாட்களில்  விடுதலை யாகக்கூடும் ‌அவர் கடந்த 6 மாதங்களுக்கு மேல் சிறையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்