நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீதிமன்றம் தற்பொழுது சரியான பாதையில் செல்கிறது.

பணம் பெரிதென நினைத்து, நீதி - நேர்மையை மறந்து, அப்பாவி மக்களுக்கு துரோகம் இழைத்து ஊழல் செய்வோர்களின் முடிவு எப்படி அமையும் என்பது சமீபத்திய நிகழ்வுகள் நன்கு உணர்த்தும் நிலையில்   


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நீதிமன்றம் தற்பொழுது சரியான பாதையில் செல்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்குக் காரணம் அரசு அலுவலகங்கள் உள்ள சில அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தான் என்ற உண்மையை உரக்கச் சொல்லி நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளது. 

தமிழ்நாட்டில் பல இடங்களில் இதே நிலை தான் 


சிட்லபாக்கம் ஏரியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சியாக தற்பொழுது தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து முழு விவரங்களை நீதிமன்றம் கேட்டுள்ளது. ஏற்கனவே அரசாணை எண் 540 மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உரிய முறையில் அமல்படுத்த இயலாத அலுவலர்கள் இதை செயல்படுத்தத் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாதச் சம்பளம் கொடுக்கத் தடை விதிப்போம் என்று அரசு அதிகாரிகள் உண்மையிலேயே பயப்படும் அந்த முக்கியமான ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. 
நீர்நிலைகள் ஆவனப்படுத்தப்பட்டால் மட்டுமே அதன் நில மதிப்பை பூஜ்ஜியம் ஆக்கி அந்த இடங்கள் விற்பனை செய்ய முடியாத வகையில் தடை செய்ய முடியும். ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிரமித்து அடுக்கு மாடி வீடுகளைக் கட்டிக் குடியிருப்பவர்கள் மற்றும் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பவர்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். வழிபாட்டுத் தலங்கள், கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர வணிக வளாகங்கள் இரக்கமே இல்லாமல் இடித்துத் தள்ளப்பட வேண்டும். 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதால் பலர் பாதிக்கபடத்தான் செய்வார்கள். அவர்களின் பாதிப்புக்கு இந்த ஆக்கிரமிப்பை பல வருடங்களாக உருவாக்கி அதை அனுமதித்த அரசாங்க நிர்வாகமும்  ஒரு காரணம் என்பதால் பாதிக்கப்பட்ட மக்களை வேறு இடத்தில் அவர்கள் சொந்தச் செலவில் குடியேற்றம் செய்ய வேண்டியதும் அதற்கு முறையான 5 ஆம் நம்பர் அறிவிக்கை கொடுத்து பிறகு உரிய காலத்தில் 7 ஆம் நம்பர் அறிவிக்கை கொடுத்து பிறகு 6 ஆம் நம்பர் அறிவிக்கை வெளியீடு செய்த அப்போதே இடிக்க சட்டம் அனுமதிக்கிறது ஆனால் 5 ஆம் நம்பர் அறிவிக்கை கொடுத்து பிறகு கையூட்டு வாங்கிக் கொண்டு அடுத்த அறிவிக்கை தராமல் காலதாமதம் செய்து நீதிமன்றத்தில் மீண்டும் நேரத்தை வீணடிக்க இந்த ஊழல் அலுவலர்கள் தான் காரணம் அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்