திருமயம் புதுக்கோட்டை இடையில் அரசு பேருந்து தீப்பற்றியதில் பயணிகள் உயிர் தப்பினர்

திருமயம் புதுக்கோட்டை இடையில் பாம்பாற்றுப்பாலம் அருகில் காரைக்குடியிலிருந்து ஈரோடு சென்ற தமிழக அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில்,  இருவர் உயிரிழந்தனர். அரசு பேருந்து தீப்பற்றி எரிந்தது.


நேற்றிரவு 10.50 மணிக்கு, காரைக்குடியிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக ஈரோட்டுக்கு  அரசுப் பேருந்து சென்றது.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே, பாம்பாற்றுப் பாலத்தில் சென்ற போது, திருமயம் நோக்கி, எதிராக வந்த இருசக்கர வாகனம் மீது,  பேருந்து நேராக மோதியதில் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியன தீப்பற்றி எரிந்தன. இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பஸ்சிலிருந்த பயணியர் தப்பினாலும் பஸ் தீயில் எரிந்தது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் வெடித்துத் தீப்பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யாரென உடனடியாகத் தெரியாத நிலையில். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்