16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டம் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அக்டோபர் 7, 2021

சூரிய சக்தி இஸ்திரி வண்டி மூலம் உலகிற்கு ஊக்கமளித்த திருவண்ணாமலையை சேர்ந்த மாணவ கண்டுபிடிப்பாளர் 16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டத்தில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்குகிறார்


தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி வினிஷா உமாசங்கர், இந்தியாவில் நடைபெற்று வரும் 16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டத்தின் (12-15 ஜனவரி 2022) மாற்றத்தை உருவாக்குபவராக (“சேஞ்ச்மேக்கர்”) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இளம் கண்டுபிடிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான திருமிகு வினிஷா பலருக்கு உத்வேகம் அளித்துள்ளார், மேலும் தலைமையாளராக (“பேட்டன் பியரர்”) தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இது முக்கிய காரணமாக இருந்தது.

16-வது அதிகாரப்பூர்வ குயின்ஸ் பேட்டன் தொடர் ஓட்டம் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் அக்டோபர் 7, 2021 அன்று தொடங்கி, 72 நாடுகள் மற்றும் காமன்வெல்த் பகுதிகளுக்கு 294 நாட்கள் பயணம் செய்த பின்னர் 2022 பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் 28 ஜூலை 2022 அன்று முடிவடையும். தொடர் ஓட்டத்தின் பாதையில் 27-வது நாடான இந்தியாவில் ஜனவரி 12 முதல் 15 வரை இது நடைபெறும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷனால் (என்ஐஎஃப்) நிறுவப்பட்ட டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இக்நைட் விருதை, சூரிய சக்தி பேனல்களைப் பயன்படுத்தும்  நடமாடும் இஸ்திரி வண்டிக்காக வினிஷா உமாசங்கர் பெற்றார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 2021-ல் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கட்டமைப்பு மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்குப் பிறகு சூரிய சக்தி இஸ்திரி பெட்டி உலகிற்கு ஒரு உத்வேகமாக மாறியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்