முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவிளையாடல் புராணம் 21-ஆவது படலம் கல்யானை தை மாதம் கரும்பு தின்ற நிகழ்வு

கல் யானைக்குக் கரும்பு தந்த படலம் என்பது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம்


சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 21-ஆவது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1357-முதல் 1385 வரை)  இப்படலம் எல்லாம் வல்ல சித்தரான படலம் என்பதன் தொடர்ச்சியாகும். தை மாதம் முதல் தினம் பொங்கல் பண்டிகை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த மன்னர்  அபிஷேகப் பாண்டியன். இறைவனை வணங்கி

கோவிலை வலம் வரும் போது சித்தர் வழியிலிருந்தார். "நீ யார்? என்று கேட்ட பாண்டியனுக்குத் தம்மை பற்றிய  பெருமைகளைக் கூறிய படி சித்தர் சிரிக்க பாண்டியன். தற்பெருமை என்று கருதி. அங்கு வேளாளர் ஒருவன் செழித்து வளர்ந்த கரும்புக் கட்டு ஒன்றைக் கொண்டு வந்து மன்னரிடம் தந்து வணங்க. அதைப் பெற்ற அரசன் சித்தரைச் சோதிக்க நினைத்து சித்தரே

இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானை உண்ணுமாறு செய்வீரா? என்று கேட்க. இதோ என்று கூறிய சித்தர் அங்கிருந்த கல்லில் செதுக்கிய யானையின் சிற்பத்தை நோக்கினார். நோக்கிய கணமே. கல் யானை அசைந்தது. பிளிறியது. துதிக்கையை நீட்டியது. அரசனிடமிருந்த கரும்பைப் பற்றி வாயில் இட்டுச் சாறு வழிய உண்டது. சித்தர் மீண்டும் கல் யானையின் மீது கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். யானை துதிக்கையால் அரசரின் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பற்றி இழுத்து வாயில் போட்டுக் கொண்டது. கோபம் கொண்ட அரசரின் மெய்க்காவலர் சித்தரை அடிக்கக் கை ஓங்கினார். நில்! என்று குரல் கொடுத்தார் சித்தர். காவலர் நின்றனர் சிலைகளாய்!


பாண்டியன் அறியாமை நீங்கியவனாய் சித்தராக தோன்றும்  சிவனடி பனிந்து மன்னிப்பு  வேண்டினான். வேண்டும் வரம் கேள்! என்றார் சித்தர். புத்திர பாக்கியம் வேண்டினார் மன்னர். சித்தர் அருளினார். யானையின் மீது கை வைத்தார். உடனே யானை தன் விழுங்கிய முத்து மாலையை கக்கி துதிக்கையால் பாண்டியனிடம் நீட்டியது. அவன் அதைப் பெற்றதும் யானை கற் சிலையாய் மாறிற்று. சித்தரும் மறைந்தார். இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த மன்னர். பின் சித்தரின் அருளால் பாண்டியனுக்கு மகன் பிறந்த வரலாறு புராணம் கூறுகிறது. குழந்தைக்கு விக்கிரமன் எனப் பெயரிட்டு வளர்த்து பருவத்தில் முடி சூட்டி இறைவன் திருவடியில் இரண்டறக் கலந்தான்.


இறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். மக்களுக்கு அவர் செய்யும் சித்துகளைக் கேள்வியுற்ற மன்னன் சித்தரை அழைத்துவர மந்திரிமார்களை அனுப்பினார். ஆனால் அரசனே தன்னை வந்து காண வேண்டும் என்று சித்தர் மந்திரிகளை திருப்பி அனுப்பிவிட்டார்.


மந்திரிகள் வந்து சித்தர் கூறியதை தெரிவித்தும், அரசனே சித்தரைக் காண சென்றார். அங்கு கூடியிருந்த மக்கள் அரசனுக்கு வணக்கத்தினைத் தெரிவித்து விலகி நின்றனர். அரசன் ஏன் சித்துகளை மதுரையில் வாழும் மக்களிடம் செய்து காட்டுகின்றார்கள். தங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு சித்தர், தான் காசியிலிருந்து வருவதாகவும், தனக்கு ஒன்றும் தேவையில்லை என்றும், வேண்டுமானால் அரசன் வேண்டுவதைக் கேட்டுப் பெறலாம் என்றும் கூறினார்.

அரசன் சித்தரைச் சோதிக்க அருகில் கரும்பு வைத்திருந்த ஒருவரிடம் வாங்கி, இக்கரும்பினை இந்திர விமானத்தை தாங்கும் கல்யானை உண்ணும் படி செய்ய வேண்டும் என்றார். அதனை ஏற்ற சித்தர் கல்யானையை பார்க்க அக்கல்யானைக்கு உயிர்வந்து மன்னன் தந்த கரும்பினை தின்றது. அது இந்த தைத்திருநாளில் நடந்த நிகழ்வு இந்த நிகழ்வு நமக்கு பல ஆண்டுகள் நினைவூட்டல் செய்கிறது ஆண்டு தோறும் நாம் கரும்பு வழங்கும் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ஆலயத்தில் யானை  சிவகாமி கடந்த ஆண்டு காலமான நிலையில் நம் கண்களுக்கு கரும்புக்கட்டுடன் மன்னார்குடி இராஜகோபால சுவாமி ஆலய யானை செங்கமலம் காட்சி தரும் நிகழ்வு     பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதியவரது தந்தை மீனாட்சி சுந்தர தேசிகர் எனத் தெரிகிறது. பரஞ்சோதி முனிவர் என நான்கு முனிவர்கள் இருந்துள்ளனர். திருவிளையாடல் புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர்  வேதாரணியம் எனப்படும் திருமறைக்காட்டில்  பிறந்தவர். தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் பயிற்றுவித்தார். திருமறைக்காட்டில் கோவில் கொண்டுள்ள சிவனைத் துதித்து வந்த பரஞ்சோதி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோவில்களையும் பார்க்க ஆவல் கொண்டு மதுரைக்கு வந்தவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சியம்மன், அந்நகரில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்களை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டதற்கிணங்கி பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தை எழுதினார். திருவிளையாடற் கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.இவர் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சிவ பக்தியில் சிறந்து விளங்கியவர்களுள் ஒருவராக வாழ்ந்தவர்.இவர் திருமறைக்கட்டுக்கு வடமேற்க்கே புன்னையகாணல் என்ற இடத்தில் இயற்கை எய்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...