46 வது ஜிஎஸ்டி சபைக் கூட்டமும் மற்றும் ஜி எஸ் டி தொடர்பான செய்திகள்

 46வது ஜிஎஸ்டி சபைக் கூட்டப்பரிந்துரைகள் . 46வது  ஜிஎஸ்டி சபைக் கூட்டம் இன்று புது தில்லியில் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சரும் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.       


      இக்கூட்டத்தில் , 45வது ஜிஎஸ்டி சபைக் கூட்டத்தின் ஜவுளி தொடர்பான பரிந்துரை நடைமுறையைத் தள்ளிவைக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஜவுளித் துறையில் தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வீதங்களே 2022 ஜனவரி ஒன்றாம்  தேதிக்குப் பின்னரும் தொடரும்.சென்னை நந்தனத்தில் வரி செலுத்துவோருக்கான வசதி சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 70 நகரங்களில் 75 வரி செலுத்துவோர் வசதி மையங்களை மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம் அர்ப்பணித்துள்ளது. வரி செலுத்துவோருக்குத் தகவல் அளித்தல் மற்றும் வழிகாட்டுதலில் உதவி செய்வதற்காக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  அதன்படி சென்னை நந்தனத்தில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரக (தெற்கு) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த உதவி மையத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல தலைமை ஆணையர் திரு. எம்.வி.எஸ். சவுத்ரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால்வரி ஆணையர் திருமதி. சுதா கோகா வரவேற்றுப் பேசினார். அனைத்து ஏற்றுமதியாளர்களும், இறக்குமதியாளர்களும் இவை சார்ந்த மற்றவர்களும் தங்களின் கேள்விகள் மற்றும் குறை தீர்ப்புக்கு இந்த மையத்தின் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  சென்னை ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி ஆணையரகத்தின் (தெற்கு) இணை ஆணையர் திரு. டி. ஜெயபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி சட்டம் மற்றும் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி சென்னை தெற்கு ஆணையரகம், தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ஜிஎஸ்டி சட்டம் மற்றும் நடைமுறைகள் குறித்த மக்கள் தொடர்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 


சிறு. குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மீதான சிறப்பு கவனத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜிஎஸ்டி  சென்னை தெற்கு ஆணையர் திருமதி சுதா கோக்கா, எம்எஸ்எம்இ  பிரிவு மற்றும் வேலைவாய்ப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். ஜிஎஸ்டி பதிவு, ரிட்டர்ன்ஸ் தாக்கல், ரிஃபண்டு நடைமுறைகள் பற்றி அவர் எடுத்துரைத்தார். இணை ஆணையர் திருமதி டி ஜெயப்ரியா, துணை ஆணையர்கள் திரு உதய ஸ்ரீராம வினைய மல்லிப்புடி, திரு அப்துல் ரஹீம் ஆகியோர் ஜிஎஸ்டி சட்டம் மற்றும் நடைமுறைகள் குறித்து விளக்கினர்.


  இந்த நிகழ்ச்சியில் டான்ஸ்டியா உறுப்பினர்கள், சிறு மற்றும் நடுத்தர  வரி செலுத்துவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக ஜிஎஸ்டி மத்திய கலால் வரி ஆணையரக இணை ஆணையர் டி ஜெயப்ரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்