உலக அளவில் 8-வது இடத்தைப் பிடித்த சென்னை விமான நிலையம்

உலக அளவில் 8-வது இடத்தைப் பிடித்த சென்னை விமான நிலையம்


உலக அளவில் பெரிய விமான நிலையங்களில் ஒருமுறை செயல் திறனுக்கான தரவரிசையில் சென்னை விமான நிலையம் 8-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.  மேலும், முதல் 10 இடங்களைப் பிடித்த விமான நிலையங்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே விமான நிலையமாகவும் அது உள்ளது. 


‘சிரியம்’ என்னும் பகுப்பாய்வு நிறுவனத்தின் ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 மார்க்கங்களில் ஒருதடவை புறப்பாடுகள் பற்றி உலகளவில் ஆய்வு நடத்தியதில் சென்னை விமான நிலையம் 89.32 சதவீதமாக இருந்தது. வாடிக்கையாளர் சேவையின் தரம், திறன்மிக்க இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டுள்ளது. 


விமான நிலைய நடைமுறைகளில் கூட்டு முடிவுகள் எடுப்பதன் பயனாக சென்னை விமான நிலையம், பயணிகள் மற்றும் தொழில்துறையின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் டாக்டர் சரத்குமார் கூறியுள்ளார். இந்த சாதனையைக் கொண்டாடும் விதத்தில் விமான நிலையப் பயணி ஒருவரால், சென்னை விமான நிலையத்தில் கேக் வெட்டப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்