போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா அடங்கிய மூன்று பார்சல்கள் பறிமுதல்

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா அடங்கிய மூன்று பார்சல்கள் பறிமுதல்


வெளிநாட்டில் இருந்து வந்த, 53 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை கொண்ட ஒரு பார்சல் மற்றும் 815 கிராம் எடை கொண்ட கஞ்சாவுடனான இரண்டு பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல் செய்தது.

 சென்னையைச் சேர்ந்த ஒருவரின் முகவரிக்கு  வந்த ஒரு பார்சலில் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அமெரிக்காவிலிருந்து விஜயவாடா மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு வந்த இரண்டு பார்சல்களில் 815 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.


மொத்தம் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள மாத்திரைகள் மற்றும் கஞ்சா சுங்கச் சட்டத்தின் படி பறிமுதல் செய்யப்பட்டது.


தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையகத்தின் முதன்மை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்