சிறுவன் புகழேந்தியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்.

சிறுவன் புகழேந்தியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இரு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்.


புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்து வெளியேறிய ஒரு குண்டு சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள குடிசையின் முன் அமர்ந்திருந்த  புகழேந்தி (வயது11) என்ற சிறுவன் தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குண்டு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில். சிறுவனின் உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்தனர்.

ஆனால் சிறுவன் இன்று திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறுவனின் உறவினர்கள் பலர் திரண்டனர். மேலும், முறையான சிகிச்சை அளிக்கவில்லை என  அவர்கள்  திருச்சி புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.


சிறுவனின் மூளையிலிருந்து இதயத்துக்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டதால், சிறுவன் கோமா நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது காரணமாக அப்பகுதியில் மக்கள் சாலை மறியல் செய்தனர்..புதுக்கோட்டை மாவட்டம் பசுமலை பட்டி கிராமத்தில் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி பலி. பசுமலைப்பட்டியில் டிசம்பர்.30 ஆம் தேதியில் பயிற்சி மையத்திலிருந்து வெளியேறிய துப்பாக்கிகுண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம் .கடந்த 31ஆம் தேதி 4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் சிறுவனின் தலையிலிருந்த குண்டு அகற்றப்பட்டது.

CISF காவலர்கள் துப்பாக்கிசுடும் பயிற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்