ஆயுஷ் உணவு வகைகளை’ அமைச்சகம் வழங்குகிறது.

ஆயுஷ் அமைச்சகம் தனது உணவகத்தில் ‘ஆயுஷ் உணவு வகைகளை’ வழங்குகிறது.


ஊட்டச்சத்து உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் திங்களன்று ஆயுஷ் பவனில் உள்ள அதன் உணவகத்தில் ‘ஆயுஷ் உணவு வகைகளை’ கிடைக்கச் செய்து புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது


.

முன்னோடி திட்டமாகத் தொடங்கப்பட்ட ‘ஆயுஷ் ஆஹார்’ கீழ் காய்கறி போஹா, பஜானி வடை, காஜர் கா அல்வா மற்றும் கோக்கும் பானம் ஆகியவை கிடைக்கிறது. அனைத்து உணவு வகைகளும் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதாகவும், அதிக ஊட்டச்சத்து மதிப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடக்க நிகழ்ச்சியில் ஆயுஷ் செயலாளர் மருத்துவர் ராஜேஷ் கோட்டேச்சா பேசுகையில், உணவகத்தில் கிடைக்கும் ஆயுஷ் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உள்ளன என்றார்.


2021-ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து தேசிய ஆயுஷ் திட்டத்தின் கீழ் பாராட்டத்தக்க பணிகளை அமைச்சகம் செய்ததாக திரு. கோட்டேச்சா கூறினார். “கல்வி, ஆராய்ச்சி, உற்பத்தி, பொது சுகாதாரம் மற்றும் நிர்வாகத்தின் மீது இந்த ஆண்டு எங்கள் கவனம்  இருக்கும். மேலும், ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்த பணியாற்றி வருகிறோம்,'' என்றார் அவர். 2022-ம் ஆண்டில் ஆயுஷ் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்தும் நிகழ்ச்சியின் போது அதிகாரிகள் விவாதித்தனர். ஆயுஷ் இணை செயலாளர்கள் திருமிகு .கவிதா கர்க் மற்றும் திரு டி. செந்தில் பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்