தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றதில் முடிவுகள் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகியது.
கடந்த 2 ஆம் தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
காலையில் மேயர்கள், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பிற்பகலில் துணை மேயர், துணைத் தலைவர்கள் பதவியேற்றனர். பெரும்பாலான இடங்களில் இந்த பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு நடந்தது. அதில்
சென்னை உள்ளிட்ட 20 இடங்களில் தி மு க மேயரும் கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் மேயரும் பதவி ஏற்றார்கள. அதில் தங்கள் பதவிக்கு பரிந்துரைத்த தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கருத்துகள்