கோயமுத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக Dr.V.கீதாலட்சுமி நியமனம் செய்யப்பட்டார்.
வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் நடந்த நிலையில்
அதற்கு விண்ணபிக்கக் கடைசித் தேதி 30.11.2021 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 45-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து முதல்கட்டமாக பத்து நபர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 12பிப்ரவரி2022 அன்று, தேடுதல் குழுவினருடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதில் நிர்வாக அனுபவம் மற்றும் பேராசிரியர் அனுபவம் சில விண்ணப்பதாரர்களுக்குக் குறைவாக இருந்த காரணத்தால்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணை வேந்தர் தேடுதல்குழு அரசின் விதிமுறையைப் பின்பற்றவில்லை. தகுதியற்றவர்களைத் துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தக் குழுவை கலைத்துவிட்டு, புதிய தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்ற புகார், ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பட்ட நிலையில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை பரிந்துரை செய்யும் வகையில், தேடுதல் குழுவின் அமைப்புக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி முனைவர்.வி.குமரேசன், நோடல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் நியமனத்திற்கான தேடல் குழு அலுவலகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நிலையில்
துணைவேந்தர் தேர்வுக்குத் தேவையான மிக முக்கியமான விதிமுறைகளைத் தேடுதல்குழு புறக்கணித்துள்ளது. மேலும், தகுதி குறைவான விண்ணப்பதாரர்களிடம் அனுபவச் சான்றிதழை 09 பிப்ரவரி 2022 ஆம் தேதிக்கு முன் அஞ்சல் மூலம் நோடல் அதிகாரிக்கு அனுப்புமாறும் தேடுதல் குழு விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவித்துள்ளது. ஆனால், விண்ணப்பம் அனுப்ப கடைசித் தேதி 30.11.2021 அன்றே முடிந்துவிட்டது. தேடுதல் குழுவுக்கு ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், அவர்கள் பணிபுரிந்த இடத்தில் தேவையான விவரங்களை ரகசியமான முறையில் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில்.கல்வி பணியில் 26 ஆண்டுகள் அனுபவமுள்ள வி.கீதாலட்சுமி கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மூன்று புதிய ரக விதைகளையும், எட்டு புதிய தொழில்நுட்பங்களையும் கண்டறிந்துள்ளார் வி.கீதாலட்சுமி தற்போது அவரை தமிழகத்தின் ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
கருத்துகள்