கனரக உருகும் கழிவுப் பொருட்களை ஒரேநாளில் அதிகளவு கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை
சென்னை துறைமுகத்தில் 26.04.2022 அன்று, எம்.டி. கேப்டன் நோன்டாஸ் கப்பலில் இருந்து, ஒரேநாளில் 4,500 டன் கனரக உருகும் கழிவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 21.06.2017 அன்று எம்.டி அட்லாண்டா கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3,938 டன் சரக்குகளை விட அதிகமாகும்.
இந்த சாதனையை படைத்ததற்காக சரக்குகளின் இறக்குமதியாளரான திருவாளர்கள் சூரியதேவ் அலாய்ஸ் மற்றும் பவர் லிமிடெட், ஸ்டீமர் ஏஜெண்ட் திருவாளர்கள் மெர்சன்ட் ஷிப்பிங் சர்வீசஸ், திருவாளர்கள் ஸ்டீவ் டோர் போருக்கா ஸ்டீல் & சர்வீசஸ் லிமிடெட் மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கு, சென்னை துறைமுக ஆணையத்தின் தலைவர் திரு சுனில் பாலிவால் இஆப., பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்