குடியரசு தலைவர் மாளிகையில் மெய்க்காவலர் மாறும்’ நிகழ்வு இன்று நடைபெறவில்லை
குடியரசுத் தலைவர் மாளிகையின் முகப்பு வாயிலில் மெய்க்காவலர் மாறும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி 2022) ல் நடைபெறாது.என முன்பே அறிவிப்பு வந்த நிலையில் . மெய்க்காவல் மாறும் நிகழ்வு நடைபெறவில்லை.
குடியரசுத் தலைவர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட மாளிகை, ராஷ்டிரபதி பவன். நாட்டின் முதல் குடிமகன் வசிக்கும் பிரம்மாண்ட மாளிகைக்கு 100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு கொண்டது
கல்கத்தாவிலிருந்து, டெல்லிக்குத் தலைநகரை மாற்ற ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி அரசு தீர்மானித்தது. இங்கு கவர்னர் ஜெனரல் இல்லத்தை மிகப் பெரியதாக உருவாக்க முடிவு செய்யப்பட்டதன்படி சுமார் 4,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு. 1912 ஆம் ஆண்டு பிரம்மாண்டமான மாளிகையின் கட்டிடப் பணிகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கவர்னர் ஜெனரலுக்கான இல்லமாகக் கட்டப்பட்டது. கட்டி முடிக்க 17 ஆண்டு காலம் பிடித்தது. 1929 ஆம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தில் பத்தொன்பதாயிரம் சதுர அடிகளில் இந்த அழகிய கட்டிடத்தை வடிவமைத்தவர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர். கட்டிடம் கட்டுவதற்காக 700 மில்லியன் செங்கல்கற்களும் 30 லட்சம் கன அடி கற்களும். சிறிய அளவில் இரும்பும் பயன்படுத்தப்பட்டன. கட்டிடம் கட்ட இந்து, புத்த, சமண மதக் கோயில்களின் வடிவங்கள் மாதிரியாகக் கொள்ளப்பட்டன. மட்டுமல்லாது ராஜஸ்தான் அரண்மனைகளின் கட்டிடப் பாணியும் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.
குடியரசுத் தலைவரின் இல்லமானதில் மொத்தம் 340 அறைகள் உண்டு. கூடம், விருந்தினர் அறைகள், அலுவலக அறைகள் குடியரசுத் தலைவரின் குடும்பத்தினர் தங்கும் அறைகள் ஆகியவையும் இதில் அடக்கம். இந்த வளாகத்துள் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள் உட்பட அலுவலக அதிகாரிகளும் குடியிருப்பர். உலகத் தலைவர்களின் பெரிய குடியிருப்புகளில் ராஷ்டிரபதி பவனும் ஒன்று. இதன் பின் பகுதியில் மிகப் பெரிய மொகல் கார்டன் உள்ளது. துலிப் மலர்கள் இந்தத் தோட்டத்தில் பூத்துக் குலுங்குகின்றன.
கருத்துகள்