சென்னை ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை
ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பில் எஸ்டி பிரிவினருக்கு சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான, ஆர்வமுள்ள பெற்றோர் நேரடியாக பள்ளியில் விண்ணப்பிக்கலாம். பள்ளி அலுவலகத்தில் 13.05.2022 முதல் 18.05.2022 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின் 73051 60907 என்ற மாணவர் சேர்க்கைப் பிரிவு உதவி எண்ணை அழைக்கலாம் என கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்