தெலுங்கானாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக வாய்ப்புள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் டாக்டர் சுவாமி
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு தெலுங்கானாவில் இரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆட்சியிலுள்ள தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினிடையே 2 பதவிகளின் வேட்பாளராக யார்? என்ற கேள்வி எழும் நிலையில் முன்னதாக தென்னிந்திய திரைப்பட நடிகரும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவருமான நடிகர் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவை சில நாட்களுக்கு முன், அவரது எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினார். அவர் பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பாளராகவும் உள்ளார். அதற்கு முன்னதாக ஒரு முறை சந்தித்து பேசியுள்ளார், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் அவர் மனுதாக்கல் செய்யலாம் எனத் தகவல்கள் வருகின்றன. மேலும் பாரதிய ஜனதா கட்சியின். மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியும் மனுதாக்கல் செய்யலாம் என தெலுங்கானாவில் பேசப்படும் நிலையில்.
தெலுங்கானா சட்டசபையில் தற்போதுள்ள பலத்தின் படி, ஆளும் கட்சி போட்டியின்றி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள ஏழு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளும் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியிடம் உள்ளன.தற்போது பதவியிலுள்ள உறுப்பினர்கள் வோடிடெலா லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோர் 2022 ஜூன் மாதம் 21 ஆம் தேதியுடன் பதவி முடியும் தருவாயில் அந்த மாநிலத்தில் இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. தெலங்கானா மட்டுமல்லாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியான 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஜூன் மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சட்டப்பேரவையில் தற்போதுள்ள பலத்தின்படி, 3 தொகுதிகளிலும் ஆளும் கட்சி போட்டியின்றி வெற்றி பெறும் அளவிற்கு பலத்துடன் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியரசு தலைவர் தேர்தலில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில் அவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில்.:-
பணவீக்கத்தால் ஏழைகளை விட பணக்காரர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறுவது என்பது வயிற்றுப் பசியைப் போக்க தானியமின்றி தவிக்கும் ஏழைகளை கேக் சாப்பிடச் சொல்வது போன்றதாகும்'' என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பழமொழி கூறி உண்மை நிலையை விளக்கி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார் .பாஜக மூத்த தலைவரான டாக்டர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‛‛இந்த நிதியாண்டில் பணவீக்கம் என்பது ஏழைகளை விட பணக்காரர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்'' என மத்திய நிதி அமைச்சகம் சொன்னதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை சுட்டிக்காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, சுப்பிரமணியசாமி உணர்த்தியது. அதில் ‛‛உண்மையில் அவர் (நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்) இப்படி கூறியிருக்கிறாரா?. இது உண்மையெனில் தானியத்துக்கே வழிஇல்லாத ஏழைகளிடம் கேக் சாப்பிட சொல்லும் பிரஞ்சு பழமொழிக்கு இணையானதாக இது இருக்கும்'' என தெரிவித்துள்ளார். அதாவது ஏழை ஒருவர் தனது வயிற்று பசியை போக்க தானியம் வாங்கவே முடியாத நிலையில் அவரை கேக் உண்ண சொல்வது அறியாமையின் வெளிப்பாடாகும். அதேபோல் தான் பணவீக்கத்தால் ஏழைகளை விட பணக்காரர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அறியாமையின் உச்சம் என்பதை மறைமுகமாக சுப்பிரமணியசாமி உணர்த்தியுள்ளார்.
கருத்துகள்