மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தங்களது கட்சியின் வேட்பாளர்களை அஇஅதிமுக அறிவித்துள்ளது.
தற்போது வட மாவட்டங்களிலில் இருந்து ஒருவர் தென் மாவட்டங்களில் இருந்து மற்றொருவர் என வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆர்.தர்மர் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும், பின்னர் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
ஜெ.ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அதிமுக மூத்த அமைச்சர்களின் ஒருவராக பார்க்கப்படும் சி.வி.சண்முகம். இராமநாதபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளராக இருந்தவர். அதிமுகவின் நீண்ட கால உறுப்பினரான ஆர்.தர்மர் தற்போது முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட விரும்பினார் தர்மர். ஆனால், கீர்த்திகா முனியசாமிக்கே கட்சித் தலைமை வாய்ப்பு அளித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஆர்.தர்மருக்கு மாநிலங்களவையில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை ஓ.பன்னீர் செல்வம் தரப்பு பரிந்துரையால் வழங்கப்பட்டிருக்கிறது.
கருத்துகள்