புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி மிகுந்த காந்தவியல் தொழில்நுட்பம்
புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி மிகுந்த காந்தவியல் தொழில்நுட்பத்திற்கு அரசு ஆதரவளிக்கிறது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சைக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சக்தி மிகுந்த காந்தவியல் தொழில்நுட்பத்திற்கு அரசு ஆதரவளிக்கிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
இதற்காக தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் பனாகா மருத்துவ தொழில்நுட்ப தனியார் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்றது. இத்திட்டத்திற்கான மொத்த தொகையான 9.73 கோடி ரூபாயில் 4.87 கோடி ரூபாயை தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கடனாக அளிக்க உள்ளது.
அப்போது பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த காந்தவியல் தொழில்நுட்பம், 2 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட மூளைக்கட்டியை அகற்ற மிகக் குறைந்த பக்க விளைவுகளுடன் துல்லியமான கதிர்வீச்சுடன் புற்றுநோய் நிபுணர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என்றார்.
கருத்துகள்