பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கார்வாரில் ஐஎன்எஸ் காந்தேரி எனும் நீர்மூழ்கி கப்பலில் பயணம் மேற்கொண்டார்
கர்நாடக மாநிலம் கார்வார் கடற்படைத் தளத்திற்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் காந்தேரி என்னும் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் மேற்கொண்டார். அதிநவீன கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலின் வலிமை மற்றும் திறன்கள் குறித்த தகவல்கள் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விளக்கப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பலின் ஆயுதத் திறன், நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரான நடவடிக்கைகளை சமாளிக்கும் விதம் ஆகியவை குறித்து திரு ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார். அமைச்சருடன் கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரிகுமார் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
திரு ராஜ்நாத் சிங் தமது பயணத்திற்கு பின்னர், நீர்மூழ்கிக் கப்பலின் தயார் நிலை குறித்து பாராட்டுத் தெரிவித்தார். இந்திய கடற்படை உலகளவிலான கடற்படைகளுக்கு இணையாக முன்னணியில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள்