முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் மகிந்தா சரியும் சாம்ராஜ்ஜியம்

மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் மகிந்தா.! சரியும் சாம்ராஜ்ஜியம்:!. அன்றும், இன்றும் சுயநலத்திற்காக மக்களை பலிகடாவாக்கும் ராஜபக்சே குடும்பம்;கொடுங்கோலர்களின் மணிமுடிகள் தெறித்து விழும்  வரலாறு 
மணிமுடிகள் மட்டுமல்ல, கொடுங்கோலர்களின் ‘மண்டையும் பிளக்கப் பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, இப்போது அப்படி ஏதும் நடக்க வாய்ப்பு இல்லை. கொடுங்கோலர்களுக்கு சொந்தமாக ஹெலிகாப்டர் இருக்கிறது, வான்வழிப் பயணத்தின் முடிவில் தரையிரங்கப் போகும் நாடு எது என்பது முன்னரே தீர்மானித்து வைக்கப்பட்டிருக்கும். கையிருப்பு டாலர், தங்கம், வைரங்களுக்காக கம்பளம் விரித்து வரவேற்கப் பலநாடுகள் காத்துக் கிடக்கும்! ”நம்மினத்துக்காரன், ‘இது நம்ம ஆளு’, நாமதான் தூக்கிப் பிடிக்கணும்” என்று தூக்கிப் பிடித்தவர்கள்  தான் இப்போது துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.


இலங்கையில் அம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் பூர்வீக வீடு எதிர்ப்பாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.  சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை பதவி விலகினார்.  இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதையொட்டி, தீ வைப்பது பொதுமக்கள் மீது தடியடி என அரங்கேறுகிறது.

இலங்கையில் அமைதியை கடைப்பிடிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ராணுவ தளபதி சவேந்திரசில்வா எச்சரித்திருக்கிறார். இலங்கையில் இன்று காலை 7 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல இடங்களில் போராட்டம் நீடிக்கிறது.

இலங்கை முக்கிய அரசியல் தலைவர்கள் திருகோணமலை படைத்தளத்தில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயாராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கும்.


அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக மகிந்த குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளதாக முன்பே தகவல் வெளியாகியிருநத நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.திரைப்படங்களின் உச்சகட்ட காட்சியமைப்பு போன்றே தெரிகிறது.

திட்டமிட்டு உருவாக்கும் கலை இயக்குனர், அதை ஒளிப்பதிவு செய்பவர்

மேலும் இத்தகைய பொருத்தப்பாடுகளை சரியாக விளக்கி திட்டமிட்டு இயக்குபவர்

என்ற அளவில் இந்த நேரத்தில் (ஒளி கோணம் அந்த மனங்களின் சினம்)  சரியாக யார் படம் பிடித்திருக்க இயலும்?

மதுரையை எரித்த இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த 

 கண்ணகி போல இங்கு யார்? ராச பக்சே குடும்பம் வீழ்நது அடுத்து அதிகாரத்திற்கு வரப் போவதும் யார் அதுவும்  ஒரு சிங்களவர் தானே? 


அதனால் மாற்று வந்து விடுமா? என்பதை இப்போது குமுறும் பல தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால் அவர்களின்  சற்றே பழி வாங்கும் மன நிலை அல்லது எதிரியின் துன்பத்துள் இன்பவிறக்க மனநிலையை கடந்து அடுத்த நுட்பமான அரசியலை பேசுங்கள் ஆக்கப்பூர்வமாக என்பதே இங்கு பொது நீதி.இலங்கை அரசியல் தலைவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு மிக மோசமான நிலையை அடைந்து விட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக அங்குள்ள மாணவர்கள் தீவிர போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இலங்கை நாடாளுமன்றத்தில் நுழைய மாணவர்கள் முயன்றனர். அப்போது அவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் மாணவர்கள் சிதறி ஓடியதால், அந்த இடமே முழுக்க போர்க்களம் போலக் காட்சி அளித்தது.

இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் அங்கு இப்போது திடீரென வன்முறையாக வெடித்துள்ளது. அரசு உள்ளிட்ட தனியார் சொத்துகளைப் பொதுமக்கள் சேதப்படுத்தி வருகின்றனர், ராஜபக்சவின் பூர்வீக வீடு உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் வீடுகளும் கூட தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை அங்கு 8 பேர் பலியாகியுள்ளனர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும்  பயனளிக்ககாததையடுத்து பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துவோரைக் கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதற்கு முதலில் மகிந்த ராஜபக்ச மறுத்தாலும், போராட்டம் மிக கடுமையாக மாறிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்கள் போராட்டம் கையை மீறிச் சென்றுவிட்ட நிலையில், மகிந்த ராஜபக்ச திருகோணமலை பகுதியில் பதுங்கி உள்ளதாகத் தகவல் வெளியானது.மேலும், மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த வெளியாகின. மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட இலங்கையில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகக் கூட இணையத்தில் தவறான தகவல் வெளியானது. இதனிடையே இது குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதரகம் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இலங்கை தலைவர்கள் யாரும் இலங்கையில் தஞ்சமடையவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தனது ட்விட்டரில், 'சில அரசியல் பிரமுகர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகிறது. இவை அனைத்தும் போலியான மற்றும் தவறான தகவல்கள். இதில் எந்த உண்மையுமில்லை. இந்தியாவில் இலங்கை தலைவர்கள் தஞ்சம் என்பதைக் கடுமையாக மறுக்கிறோம்' என அதில் கூறப்பட்டுள்ளது.மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் மகிந்தா சரியும் சாம்ராஜ்ஜியம்: அன்றும், இன்றும் சுயநலத்திற்காக மக்களை பலிகடாவாக்கும் ராஜபக்சே குடும்பம்; 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போருக்கு பின் வன்முறை பூமியாக மாறிய இலங்கை 13 ஆண்டுகளுக்கு பிறகு துப்பாக்கிச்சூடு, மரண ஓலம், திரும்பிய பக்கமெல்லாம் தீ என வன்முறை பூமியாக மாறி உள்ளது 2009 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கு, மகிந்தா ராஜபக்சேதான் காரணம் என்று தூக்கி வைத்து கொண்டாடிய சிங்கள மக்களால் இன்று விரட்டி அடிக்கப்பட்டுள்ளார் மகிந்த ராஜபக்சே. ராணுவம், அரசு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கைக்குள் வைத்திருந்தாலும், மக்கள் போராட்டத்திற்கு முன் எடுபடவில்லை. அன்று தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்ட ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இன்று சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் ஓரணியில் திரண்டு ‘வெளியே ஓடு’ என்று குரல் கொடுக்கும் நிலையில்

இன்று இலங்கை மக்களின் தேவையை நிறைவேற்ற வெளிநாட்டிலிருந்து பொருட்களைக் கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் சுமார் 90 ஆண்டுகள்  ஆண்ட ராஜபக்சே குடும்பத்தினர், ரூ.4 லட்சம் கோடி கடனில் நாடு செல்ல காரணம் பல அதன் வரலாற்றுப் பார்வை.  1930 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இலங்கை அரசின் அதிகார பதவியில் அமர்ந்த ராஜபக்சே குடும்பத்தின் முதல் உறுப்பினர் டான் மேத்யூ ராஜபக்சே. 1936 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கை அரசின் சபைத்தேர்தலில் 12,106 வாக்குகள் பெரும்பான்மையுடன் வென்று அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இரண்டாவது அரச சபையின் உறுப்பினராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். இவருடைய மறைவுக்கு பின், இவருடைய சகோதரர் டான் ஆல்வின் ராஜபக்சே 1947 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு, அமைச்சராகப் பதவி வகித்தார். இவருடைய மகன், மகள்களான சமல், ஜெயந்தி, மகிந்த, கோத்தபய, சந்திரா, பசில், டட்லி, ப்ரீத்தி மற்றும் கந்தானி ஆகிய 9 பேரும் அவர்களது வாரிசுகளான இவர்கள் தான் இத்தனை ஆண்டு காலம் இலங்கை மக்களை தவறாக வழிநடத்தி இந்த நிலையில் கொண்டு வந்து விட்டவர்கள்

2005 ஆம் ஆண்டில் உச்சபட்ச அதிகாரம்


அமைச்சர், சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அரசாங்க பதவிகளை சுமார் 60 ஆண்டுகள் அலங்கரித்து வந்த ராஜபக்சே குடும்பத்தினர் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிபர் பதவியை 2005 ஆம் ஆண்டில் கைப்பற்றிய நிலையில். 1998 ஆம் ஆண்டுக்கு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த கோத்தபய, பசில் ராஜபக்சே ஆகியோர் 2005 ஆம் ஆண்டு அதிபர் பதவிக்கு மகிந்த போட்டியிடுவதால் திரும்பினர். நடந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்சே போட்டியிட்ட தேர்தலில் 2 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று அதிபரானார். தமிழ் அமைப்புகள் வாக்கு அளித்திருந்தால், ரணில் விக்ரமசிங்கே அதிபராகி இருந்திருப்பார்.  அதிபரான பிறகுதான் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்க தொடங்கியது ராஜபக்சே குடும்பம். மகிந்தா அதிபரானதும், கோத்தபயாவுக்கு ராணுவ அமைச்சர் பதவியும், பசில் ராஜபக்சேவுக்கு அதிபரின் ஆலோசகர் மற்றும் நிதியமைச்சராகவும், சமல் ராஜபக்சே சபாநாயகராகவும், சமல் மகன் சசிந்திரன் ராஜபக்சே மாகாண அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். மொத்தம் 7 கேபினட் அமைச்சர்கள் உட்பட 9 அமைச்சர்கள் பதவி ராஜபக்சே குடும்பத்தினரால் மட்டுமே அலங்கரிக்கப்பட்டது. இதுதவிர காந்தானி மகன் நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். இவ்வாறு குடும்ப பலத்துடன் வலம் வந்த மகிந்த, பிரிவினைவாதிகளை முடிவுக்கு கொண்டு வரத் திட்டமிட்டு 2007 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான நேரடி யுத்தத்தை தொடங்கினார்.


 உச்சக்கட்ட போருக்கு பின்னர் இறுதியாக 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி புலிகளின்  அமைப்பு தலைவன் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், போர் முடிவுக்கு வந்ததாகவும் அறிவித்தார்.

இந்த போரில் வெற்றியடைந்த பின் சிங்கள மக்களால் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது ராஜபக்சே குடும்பம். இதனால், மன்னர் போல் மாறிய ராஜபக்ச  பிரசார பல்வேறு குற்றச்சாட்டுகளுடன்  2010 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த மகிந்த, 58 சதவீதம் வாக்குகள் பெற்று 2 வது முறையாக அதிபரானார். இந்த ஆட்சியிலும் கோத்தபயாவுக்கு ராணுவ அமைச்சர் பதவி, பசிலுக்கு நிதியமைச்சர், மகிந்த மகன் நமலுக்கு விளையாட்டு துறை அமைச்சர் என குடும்பத்தினர் அமைச்சர் பதவிகள் நீண்டு கொண்டே போனது. போர் குற்றம், பல்வேறு முறைகேடு புகார்கள் என அனைத்தையும் மீறி 2வது முறையாக அதிபரானதால், இனிமேல் நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவம் ராஜபக்சே குடும்பத்துக்கு வந்ததாகவே தோன்றும் நிலையில்.

இந்த ஆட்சி காலத்தில் அரசு துறை மட்டுமல்ல தனியார் துறையான விமானம், தொலைக்காட்சி, வர்த்தகம் என பல்வேறு தொழில்களில் ராஜபக்சே குடும்பம் கோலோச்சியது. நாட்டின் 70 சதவீதம் வர்த்தகமும் ராஜபக்சே குடும்பத்தையே சார்ந்திருந்தது. இதனால், 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜபக்சே குடும்பம் தோல்வியடைந்தது. அதிபராக மைதிரி பால சிறிசேனாவும், பிரதமராக ரணில் விக்ரகமசிங்கேவும் பதவியேற்றதையடுத்து நடந்த உள்ளாட்சி அமைப்புகள் ராஜபக்சே ஆதரவாளர்கள் வெற்றி முகம் கண்டதால், 2019 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கத் தயாரானார் மகிந்த ராஜபக்சே.  


அதிபரும், பிரதமரும்  இலங்கை அரசியலமைப்புச் சட்டப்படி, தொடர்ந்து 2 முறை அதிபரானவர் மீண்டும் அதிபராக போட்டியிட முடியாது. அடுத்த இடைவெளி தேவை அதனால் அதிபர் பதவிக்கு கோத்தபயாவை அதிபர் வேட்பாளராக களமிறங்கினார் மகிந்த. இந்த தேர்தலில் கோத்தபயா வெற்றி பெற்று அதிபரானார். பின்னர், மகிந்தாவை பிரதமராக நியமித்தார் கோத்தபய. முதன்முறையாக அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்தனர். இவர்கள் பதவியேற்ற சில மாதங்களில் ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது 270 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.


இதனால், சர்வதேச சுற்றுலா பயணிகள் வருவதற்கு அஞ்சினார். தொடர்ந்து, கொரோனா  பாதிப்புகள் ஊரடங்கால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகித்த சுற்றுலா, தேயிலை தொழில், ஜவுளி ஆகிய தொழில்கள் முடக்கம், அன்னியச் செலாவணி வரலாறு காணாத சரிவு போன்ற காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, நிமிடத்திற்கு நிமிடம் விலைவாசி உயர்வு, பட்டினிக் கொடுமை போன்ற காரணங்களால் இலங்கையின் திரும்பிய பக்கமெல்லாம் வீதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் பலமணி நேரம் மின்வெட்டை சந்தித்தது. மருத்துவமனைகளில் மருந்து இல்லை. பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை. கடன் கொடுக்கவும் பணம் இல்லை. நாட்டில் எதுவுமே இல்லாததால் திவாலாகும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டதனால், கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் ‘பதவியை விட்டு ஓடிடு’ என்று நாடு முழுவதும் கோஷம் எழுப்பினர். நாடே கொந்தளிப்புசுமார் ஒருமாதமாக அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் முன்பு மாணவர்கள், புத்த துறவிகள், தொழிற்சங்கங்கள் என அனைத்து தரப்பு மக்களும்  தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், வேறு வழியின்றி மகிந்தா பதவியை பறிக்க கோத்தபய முடிவு செய்தார். அதன்படி,  மகிந்த பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் ஆதரவாளர்களைத் திரட்டி, பிரதமர் அலுவலகம் முன்பு மற்றும் காலி முகத்திடலிலும் போராடிய மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள், மகிந்தா ஆதரவாளர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து, மகிந்த வீடு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர் வீடுகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டது. கொழும்பு புறநகரான நிடம்புவா பகுதியில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமர கீர்த்தி அதுகோரலா ஆயிக்கணக்கான மக்களுக்கு பயந்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. நெருக்கடி முற்றியதால் இறுதியாக மக்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து மகிந்தா ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபயவிடம் வழங்கினார். போராட்டக்காரர்களின் ஆவேசத்தில் சிக்கி சின்னப்பின்னவதில் இருந்து தப்பிக்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஏற்கனவே போராட்டக்காரர்கள் மீது கடந்த ஒரு வாரங்களுக்கு முன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
சர்வாதிகாரம் என்றாவது ஒருநாள் நிச்சயம் சரியும். அதன்படி மகிந்தா சாம்ராஜ்ஜியம் சரிந்து உள்ள நிலையில் மக்களின் கோபத்துக்கு ராஜபக்சே குடும்ப முன்னோர்களின் கல்லறை கூட தப்பவில்லை. அன்றும், இன்றும் தனது சுயநலத்திற்காக மக்களை பலிகடாவாக்கும் ராஜபக்சே குடும்பத்தை இந்த முறை நாட்டை விட்டே ஓட விட வேண்டும் என்று மக்கள் உறுதியாக உள்ளனர். மகிந்தாவை போல் கோத்தபய மக்களுக்கு அடிபணிந்து பதவியை விட்டு ஓடினாலும் ஆச்சரியமில்லை என்பதே எதார்த்தம். மக்கள் ஒன்றுப்பட்டால் அரசாங்கமும் ஒன்றுமில்லை. அதிகாரமும் ஒன்றுமில்லை என்பதற்கு இலங்கையே காட்சி அதுவே சாட்சி.

மகிந்த ராஜபக்சே வசித்து வந்த பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தி வந்ததால் அவர் வெளியேர முடியாமல் தவித்தார். நேற்று காலை ராணுவத்தினர் மக்களை கலைத்ததால், பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறிய மகிந்தா கடற்படை தளபதி வீட்டில் தஞ்மடைந்துள்ளார். மகிந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பலர் ரத்மலான விமான நிலையம் வழியாக வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானதால், அங்கும் மக்கள் குவிந்தனர். ராஜபக்சே குடும்பத்தினர் சாலை மார்க்கமாகச் சென்றால், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால், ஹெலிகாப்டர் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் தப்பிச் சென்றனர். மகிந்தாவின் மகன் நமல் ராஜபக்சேவின் மனைவி ஹெலிகாப்டர் பயத்துடன் தப்பி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நாடு முக்கியம் அல்ல. பதவிதான் முக்கியம்..

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்தவொரு நடவடிக்கையும், அதிபர் கோத்தபய மற்றும் மகிந்தா எடுக்கவில்லை. மாறாக யாரிடம் கடன் கேட்கலாம், எந்த நாட்டிடம் கையேந்தலாம் என்று யோசித்து வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்க இதுவரை எந்த முக்கியமான முடிவும் எடுக்கவில்லை. மாறாக பதவியை காப்பாற்ற மட்டும் பல்வேறு ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட மகிந்த ஆதரவாளர்கள் திட்டமிட்டே அவரது சொந்த ஊரிலிருந்து சுமார் 3,000 பேர் தலைநகர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர் என்ற தகவல் வருகிறது .இடைக்கால அரசு அமைய 19வது சட்ட திருத்தம் தேவை

இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கும்படி அதிபர் கோத்தபய விடுத்த அழைப்பை, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார். அதிபருக்கு கட்டுபாடற்ற அதிகாரம் அளிக்கும் 20 வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெறுதல், நாடாளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் 19 வது சட்ட திருத்தத்தை மீண்டும் அமல்படுத்துவது, அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் நடவடிக்கையுடன் இடைக்கால அரசை குறைந்தபட்சமாக 18 மாதங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இடைக்கால அரசு அமைப்பது பற்றி ஆலோசிக்கலாம் என்று பிரேமதாசா தெரிவித்துள்ளார். ஆனால், அதிபரின் அதிகாரத்தை குறைக்க ஒருபோதும் விரும்பாத கோத்தபய இந்த நிபந்தனையை ஏற்றுகொள்வாரா என்பது தான் தற்போதய கேள்வி. இதனால், இடைக்கால அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததுபோல், கோத்தபயவும் பதவியை விட்டு விலக வேண்டும் என்று எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராஜபக்சே குடும்பத்தினர் யாரும் இன்றி புதிய அரசை அமைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி அதிபரை பதவியில் இருந்து நீக்குவதும் சுலபம் அல்ல. தொடர் கண்டன தீர்மானங்கள் கொண்டு வந்தே நீக்க முடியும். இதனால், மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து கோத்தபயவும் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகிய பின் இலங்கையில் ஏற்பட்ட வன்முறையால் அவரது வீடு மற்றும் அமைச்சர்கள், எம்பிக்கள், மேயர் வீடுகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டது. தீப்பற்றி எரியும்போது, மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு மகிந்த ராஜபக்சேவின் சாம்ராஜ்ஜியத்தை முடித்து பதவியில் இருந்து மக்கள் விரட்டியடித்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.  வெற்றியூர்  ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன.  சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய