குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல' எனத் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திமுகவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக புகார் தெரிவித்து இருந்தார். தேர்தல் ஆணையத்தின் விதியை மீறியுள்ளதால் திமுகவின் பதிவை ரத்து செய்ய வேண்டுமென்று கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‛‛திமுக செயலாளர் தேர்தல் ஆணைய விதிகளை மீறி கருத்துத் தெரிவித்துள்ளார். பிராமணர்களை இனஅழிப்பு செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். இதுதான் பெரியாரின் கொள்கை என தெரிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்குரிமையைச் செலுத்த முடியாத நிலை கூட வரலாம். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும். மேலும் திமுகவின் பதிவை தேர்தல் ஆணையத்திலிருந்து நீக்க வேண்டும்'' எனக் கூறியிருந்தார். இது விசாரணை நிலுவையிலுள்ள நிலையில் தமிழ் நாடு ஆளுநர் ஆர்என் ரவிக்கு கடிதமெழுதியுள்ளதில் திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி 2022 ஜூன் 3 ஆம் தேதி தமிழ்ப் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென டுவிட்டரில் கூறியுள்ளார்.
இதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196 ன் கீழ் வழக்குத் தொடர அனுமதியளிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். அதோடு மன்மோகன் சிங், (2012) 3 SCC 1 வழக்கில் உச்சநீதிமன்றமளித்த தீர்ப்பையும் மேற்கொள்காட்டியுள்ளார்.
பொது அமைதியைக் குலைக்கும் வகையில், நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மேற்படி புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதியளிக்க வேண்டும்'' எனக் கூறியுள்ள கடிதத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛‛ஸ்டாலின் அவர்களே, பிராமணர்களிடையே கடினமான மனிதர்கள் இருக்கிறார்கள் என்று ராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள். குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்