நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
2022-23 ராபி பருவத்தில், 187.86 லட்சம் மெட்ரின் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது
மத்தியத் தொகுப்பின்கீழ், 2022-23 ராபி சந்தைப்படுத்தல் பருவத்தில், சீராக நடைபெறுகிறது. 26.06.2022 வரை 187.86 லட்சம் மெட்ரின் டன் அளவுக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 17.85 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.37,852.88 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்திலிருந்து 96 லட்சத்து 46 ஆயிரத்து 954 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 7 லட்சத்து 98 ஆயிரத்து 851 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 19438.61 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக கொடுக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்திலிருந்து 41 லட்சத்து 81 ஆயிரத்து 151 மெட்ரின் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3 லட்சத்து 10 ஆயிரத்து 966 விவசாயிகளுக்கு, 8425.02 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலையாக கொடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்திலிருந்து 3 லட்சத்து 33 ஆயிரத்து 697 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் 80 ஆயிரத்து 709 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு 672.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்திலிருந்து 46 லட்சத்து2 ஆயிரத்து 796 மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 5 லட்சத்து 91 ஆயிரத்து 93 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 9274.63 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்