நாட்டின் நீலப்பொருளாதாரம் குறித்த 3 நாள் சிந்தனைக் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு
கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்
நாட்டின் நீலப்பொருளாதாரம் குறித்த 3 நாள் சிந்தனைக் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகம் மாநிலம் கூர்கில் இன்று தொடங்கிய இந்த மாநாட்டிற்கு அத்துறைக்கான அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று திரு சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நீலப் பொருளாதாரத்தை மாற்றுவதையும், 'போக்குவரத்து மூலம் மாற்றத்தின்' பின்னணியில் உள்ள காரணத்தை உணர்த்துவதையும் இலக்காகக் கொண்டதாக அவர் கூறினார்.
கருத்துகள்