பாதுகாப்பு அமைச்சகம் அக்னிபத் –இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் & பாதுகாப்புத்துறை சார்ந்த 16 பொதுத்துறை நிறுவனங்களில் அக்னிவீரர்களுக்கு10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் ஒப்புதல்
தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் அக்னிவீரர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 10% காலிப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த 10% இட ஒதுக்கீடு, இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த 16 பொதுத்துறை நிறுவனங்களான – ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம்(HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (BEL), பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இஞ்சினியர்ஸ் (GRSE), கோவா ஷிப்யார்டு நிறுவனம் (GSL), ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம்(HSL), மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்(MDL), மிஸ்ரா தாது நிகாம் (மிதானி), ஆர்மர்டு வெஹிக்கில்ஸ் நிகாம்(AVNL), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் & எக்யுப்மெண்ட் இந்தியா நிறுவனம்(AW&EIL), முனிஸன்ஸ் இந்தியா நிறுவனம் (MIL ), யந்த்ரா இந்தியா நிறுவனம் (YIL), கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம் ( ), இந்தியா ஆப்டெல் நிறுவனம்( ) மற்றும் ட்ரூப் கம்ஃபர்ட்ஸ் நிறுவனம்(TCL ) ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த இட ஒதுக்கீடு, ஏற்கனவே உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக வழங்கப்படும்.
இந்த நடைமுறைகளை செயல்படுத்த ஏதுவாக, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள்கொண்டுவரப்படும். பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களும், இதேபோன்ற திருத்தங்களை, தங்களது நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு, அக்னிவீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக, தேவையான வயது தளர்வுகளும் வழங்கப்படும்.
கருத்துகள்