விபத்தில் பள்ளி மாணவி உயிரிழக்கக் காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 14 மாதங்கள் சிறைத்தண்டனை
சாலைப் பயண விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவ வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 14 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம் எடையாா்குப்பம் கிராமம் பலாப்பட்டு காலனியைச் சோ்ந்த அல்லிமுத்துவின் மகள் தனலட்சுமி (வயது 16). சி.என்.பாளையத்திலுள்ள அரசுப் பள்ளியில் 2018 ஆம் ஆண்டு பிளஸ் 1 வகுப்பு படித்தாா். 22-ஜூன்-2018 அன்று எடையாா்குப்பத்திலிருந்து கடலூா் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தாா். கொஞ்சிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது ஓட்டுநா் திடீரென்று பிரேக் பிடித்த போது, பேருந்திலிருந்து தனலட்சுமி தவறிக் கீழே விழுந்த நிலையில் அவா் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் நிகழ்விடத்திலேயே மாணவி உயிரிழந்தாா். இது குறித்து நடுவீரப்பட்டு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த.
இந்த வழக்கு விசாரணை கடலூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் எண்-1 நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எல்.வனஜா வெள்ளிக்கிழமை அன்று தீா்ப்பளித்ததில், அஜாக்கிரதையாக பேருந்தை இயக்கியதாக மேல்மாம்பட்டைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயகிருஷ்ணனுக்கு (வயது 42) 14 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூபாய்.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்