குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பணிவழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்றார்
புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பாதுகாப்புத்துறை பணிவழங்கும் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த விழாவில் தீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது
“இன்று முற்பகலில் பாதுகாப்புத்துறை பணிவழங்கும் விழாவில் பங்கேற்றேன். அங்கு தீரச்செயல்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.”2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்
முப்படைகளின் தளபதியான குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று 2-ம் தொகுதி பாதுகாப்பு விருதுகளை இன்று வழங்கினார். புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இறப்புக்கு பின் ஒரு கீர்த்தி சக்ரா விருதும், 14 சௌரிய சக்ரா (இறப்புக்கு பின் 8) விருதும் வழங்கப்பட்டது. அளப்பரிய வீரம், அசாத்திய துணிச்சல், மற்றும் கடமையில் அதீத ஈடுபாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்கான, வீரதீர விருதுகளும் வழங்கப்பட்டன சிறப்பான சேவைக்காக 13 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்களையும், 29 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
கருத்துகள்