அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுகிறது: பிரதமர்
அசாமின் வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் தெரிவித்திருப்பதாவது:
“கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிலவரம் குறித்து மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், இத்தகைய சவாலை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுகிறது.”
“வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் உள்ளனர். அவர்கள், மீட்பு பணிகளை மேற்கொள்வதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் வழங்குகிறார்கள். மீட்புப் பணிகளின் ஒரு பகுதியாக, விமானப் படை, சுமார் 250 முறைகள் பயணித்துள்ளது.”
“முதலமைச்சர் @himantabiswa, அசாம் மாநில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் நாள் முழுவதும் பணியாற்றுவதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளையும் அளிக்கின்றனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன், அனைத்து விதமான உதவிகளும் வழங்கப்படும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன்.”
கருத்துகள்