குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு .
முன்பு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், முன்னால் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பானர்ஜி 22 கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து டெல்லியில் இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி பொது வேட்பாளராக போட்டியிட வைக்க காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் மறுத்து விட்ட நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களின் . கூட்டத்திற்குப் பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக'' அறிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்கா 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகிய பின்னர் 2021 ஆம் ஆண்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அகில இந்தியத் துணைத் தலைவரானார். அவரது வரலாற்றை உற்று நோக்கினால்
1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி பிகார் மாநிலம் பட்னாவில் பிறந்தவருக்குத் தற்போது வயது 84.
1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் துவக்க கால நிதி அமைச்சராகவும், அதன் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் யஷ்வந்த் சின்ஹா.1990 ஆம் ஆண்டு முதல்-1991ஆம் ஆண்டுகளில் பிரதமரான சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராகப் பதவி வகித்தவர்ர்.1980 ஆம் ஆண்டுகளில் ஜனதா கட்சியின் மூலம் அரசியலில் களம் நுழைந்த யஷ்வந்த் சின்ஹா அதற்கு முன்னதாக 1958 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் விரிவுரையாளராகவும், பின்னர் ஐஏஎஸ் அதிகாரியாக 25 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார்.
1960 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த யஷ்வந்த் சின்கா 1984 ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியலில் நுழைந்தார்.
தமது அரசியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து 1988 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான யஷ்வந்த் சின்ஹா. 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஜனதா தளத்திலுமிருந்தார். பின்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவர் 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் அக்கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலைத் தவிர மற்ற மூன்று தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களைவுக்குத் தேர்வானார் யஷ்வந்த் சின்ஹா.
1995 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை உள்ள காலத்தில் பிகார் மாநிலத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவுமிருந்தார்.
யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுகள் வரை தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராகவும், உள்நாட்டு விமானப்போக்குவரத்துத் துறை இணை அமைச்சராகவுமிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்