வங்கி மோசடி வழக்கில் குற்றவாளிகளுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை
பஞ்சாப் தேசிய வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு சிபிஐ-ன் பொருளாதார குற்றங்கள் பிரிவு சென்னையில் 20.5.2004 அன்று வழக்குப்பதிவு செய்தது. இதில் வி.எம்.எஸ். ஜாபருல்லா முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இவருடன் வி.எம்.எஸ்.ஹாஜி முகமது, எஸ். தமிழ்ச்செல்வன், ஆர்.ரத்தினகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் கூட்டு சதிசெய்து போலியான ஆவணங்களை உருவாக்கி ரூ.3 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இவர்களுக்கு எதிராக சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 7.3.2006 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து 31.5.2002 அன்று நீதிபதி திருமதி ஆர். கிரிஜா ராணி தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி, குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொருவரும் ரூ.25,000 அபராதம் செலுத்தவேண்டும். தவறினால் ஆறு மாத கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாக சென்னையில் உள்ள சிபிஐ- பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்