இராம் பகதூர் ராயின் புத்தக வெளியீடு குறித்து பிரதமர் மோடியின் செய்தி
திரு ராம் பகதூர் ராயின் ‘ இந்திய அரசியல் சாசனம்; சொல்லப்படாத கதை ‘ புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் வீடியோ செய்தி மூலம் உரையாற்றினார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள புத்தகம் அரசியலமைப்பை விரிவான முறையில் முன்வைக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் ஜூன் 18 அன்று கையெழுத்திட்டார், அரசியலமைப்பின் ஜனநாயக இயக்கவியலின் முதல் நாளைக் குறிக்கும் இது நமது மிகப்பெரிய பலம் என்று பிரதமர் கூறினார்.
நாட்டின் பல தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்றக்கூடிய சுதந்திர இந்தியா போன்ற தொலைநோக்கு வடிவில் நமது அரசியலமைப்பு நம் முன் வந்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார். அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் சுதந்திரம் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு 1946 டிசம்பர் 9 அன்று நடந்தது என்பதை நினைவுகூர்ந்த அவர், இது நமது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கிறது என்றார்.
எதிர்கால இந்தியாவில் கடந்த கால உணர்வு வலுவாக இருப்பதை உறுதி செய்வதற்காக, மறக்கப்பட்ட எண்ணங்களை நினைவுகூரும் புதிய இந்தியாவின் முயற்சியின் பாரம்பரியத்தில் திரு ராயின் புத்தகம் இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்நூல், சுதந்திர வரலாறு மற்றும் நமது அரசியலமைப்பின் சொல்லப்படாத அத்தியாயங்களுடன், நாட்டின் இளைஞர்களுக்கு புதிய சிந்தனையைத் தருவதாகவும், அவர்களின் உரையாடலை விரிவுபடுத்துவதாகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.
கருத்துகள்